பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்று திராவிட நாடு கேட்ட
நந்தம் அண்ணா சிந்தனை செய்தார்!
திராவிட நாட்டிலும் உயர்ந்தது பாரத
நாட்டின் சுதந்திரம் என்றுகண் டார்!பின்
திராவிட நாடு வேண்டாம் நமக்குப்
பாரத நாட்டுச் சுதந்திரம் தேவை
என்றார் திடமாய்! நின்றார் உறுதியாய்!
ஆயினும்,
உரிமை வேறு உறவு வேறு என்ற
அண்ணாவின் இதயம் இன்றும் நினைவோம்!
காலிஸ்தான் கூர்க்காஸ் தான் என்னும் குரல்களை
முடக்கிப் போடவும் ராஜீவ் காந்திக்கு
அருகினில் நின்று குரல் கொடுக்கவும்
இந்தி வெறியரை அடக்கி வைக்கவும்
இற்றை நாளில் அண்ணா இல்லையே!
அண்ணா வழியில் அருமைப் பாரதம்
ஒரு நா டேயாம்! இஃதே உண்மையாம்!

கவிஞர் வெள்ளி நிலவன் - அறிமுகம்


கவிஞர் வெள்ளி நிலவன்முந் துகிறார்;
அண்ணா வின்மொழிக் கொள்கை இதுவெனக்
கவினுறக் காட்ட வருகிறார்! வெள்ளி
வீதி யாரை நினைவூட்டு கின்ற
வெள்ளி நிலவனே! இருபெய ரொட்டுப்
பண்பா ளர்நீர்!
வெள்ளி நிலவெனில் நிறைநிலா வாகும்!
குறைவி லாதொளி வீசும் நிலவாம்!
நிலவுக் கும்குறை வந்துஅதை மூடி
இருள்க லந்தொளி தருதலும் உண்டு!
இன்று நம் தாய்த்தமிழ் மொழிநிலை வெள்ளி