பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியரங்கக் கவிதைகள்

81


தமிழ்மொழி வளரத் தடையாய் இருப்பது
ஆங்கில மே!ஆங் கிலத்தைப் பயிற்று
மொழியி லிருந்து முதலில் அறவே
விலக்கி அன்னைத் தமிழைஅந் நிலைக்குக்
கொணர்க! கொணர்க! அன்றே நமது
தமிழ்சிறக் கும்தமி ழர்நிலை உயரும்!
அண்ணா வின்வழி ஆற்றுவம் பணியே!

கவிஞர். மீனவன் - அறிமுகம்


வையகம் இயக்கும் வரலாற் றுணர்வு
கடமை உணர்வைக் காசினி யோர்க்குத்
தோற்றுவிக் கின்றது! செந்தமி ழினத்தின்
தொன்மை நலமார் வரலாற் றுணர்வு
அறிஞர்அண் ணாவின் கடமை உணர்வினை
முகிழ்க்கச் செய்தது! மீனக் கொடியினைத்
தாங்கி இந்தத் தரணியை யாண்டு
புகழ்படைத் தவர்கள் பாண்டிய மன்னர்கள்!
அண்ணா நெஞ்சம் கவர்ந்த மன்னர்கள்!
மீண்டும் பழந்தமி ழகத்தைக் கண்டிடத்
துடித்தெ ழுந்தவர் அறிஞர் அண்ணா!
இங்கொரு மீனவன் வருகிறார்! இவர்க்கு
மீனக் கொடியில்லை! ஆட்சியுமில்லை!
ஆனா லும்கவி ஆட்சி செய்பவர்!
கண்பார் வையினால் கருவுறச் செய்யும்மீன்!
அண்ணா கண்களே பாடம் சொல்லிடும்
கவிஞர் மீனவன் அண்ணா வழியில்
கடமை இதுவெனக் காட்ட வருகிறார்!
ஐயா! கவிஞர் மீனவன் அவர்களே!
கடமை இதுவெனக் காட்டி, இன்றையக்
கடமையைச் செய்வீர்! கவிதை பொழிகவே!