பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 கவியரங்கக் கவிதைகள்

85


கவிச்சுடர் என்றே என்றும் திகழுவீர்!
அண்ணா ஒருசுடர்! அறிவுச் சுடர்அவர்!
அண்ணா வின்சுடர் மிக்க சமுதாய
உணர்வினைக் காட்டக் கவிச்சுட ரே, நீர்
வருக! வருக! கவிஒளி வீசுக!

முடிப்பு:
அண்ணா வின்தலை முறையினில் நாட்டில்
சமுதாயம் இல்லை! சாதிகளே இருந்தன!
சாதி மதங்களில் சார்பிலாச் சமுதாயம்
காண்பதே அண்ணா வின்ஆ வேசம்!
சுரண்டும் வர்க்கம் இலாச்சமு தாயம்
காண்பதே அண்ணா காட்டும் சமுதாயம்!
அண்ணா படைத்த பார்வதி பி.ஏ.
என்னும் புதினம் இதுசமு தாயம்
என்று காட்டிடும்! இன்னும் அந்தச்
சமுதா யம்உரு வாகவே இல்லை!
அண்ணா வழியில் அச்சமு தாயம்
காண்பது நம்மனோர் கடமை என்று உணர்வோம்!

கவிஞர் மரியதாஸ் - அறிமுகம்


உலகப் பொதுமறை தந்த வள்ளுவர்
மானுடத் தின்கட மைகுடி செயல்எனக்
காட்டிய ஒட்பம் உணர்க! தாம் பிறந்த
குடியைஆ ளாக்குதல் குடிசெயல் எனப்படும்!
குடியிற் சிறந்தவர் கவிஞர் மரியதாஸ்!
இவர்ஒர் ஆசுகவி! உணர்ச்சி ததும்பப்
பாடிடும் பைந்தமிழ்க் கவிஞர் கோமான்!
தெள்ளு தமிழில் சிறந்த கவிதைகள்
அள்ளி வழங்கிடும் அருமைக் கவிஞர்!