பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


களுக்கும் இயக்கத்திற்கும் ஏற்ப, நமது நரம்பு மண்டலத்தில் பாதிப்புகள் ஏற்படும். இந்தப் பாதிப்புகள் நமது உடலியக்கத்தில் சில பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்தப் பாதிப்புகளிலிருந்து உடலை - உடலியக்கத்தைக் காத்துக் கொள்வது பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்வது அறிவுடைமையேயாகும். ஆனால் பகுத்தறிவுவாளர் இதை மூடநம்பிக்கை என்று சொல்கின்றனர். இது தவறான அறிவியலுக்கு முரணான முறை.

நல்ல உடல், நோயை எதிர்த்துப் போராடிப் பாதுகாத்துக் கொள்ளும். உடல், வலிமை குன்றின் தற்சார்புச் சூழ்நிலைகளால் பாதிக்கப்பெற்று நோய் உருவாகிறது. எனவே நோயின்றி வாழ்தலும் நோய் வந்தால் மருத்துவம் செய்து கொள்ளும் முறையும் வளர வேண்டாமா? நோயில்லாமல் நெடியநாள் வாழும் முறைமையைக் கற்றுக் கொள்ள வேண்டாமா?

வளமும் வாழ்வும் மானுடத்தின் படைப்பு. உழைப்பே மூலதனம். முயற்சியே முன்னேற்றத்தின் படி விதி என்பது என்ன? என்றெல்லாம் தெரிந்து கொண்டு அறிவறிந்த ஆள்வினையுடன் வாழவேண்டாமா? விதித் தத்துவத்தின் பொருள் புரியாமல் ஆற்றல் மிக்க வாழ்க்கையை முடக்கிப் போட்டு ஆண்டாண்டு காலமாக அழுதுகொண்டிருப்பது நியாயமா ? திருஞானசம்பந்தர் அருளியதுபோல் ஊனமுடையாராக வாழலாமா?

"அவ்வினைக் கிவ்வினை யாமென்று
சொல்லும் அஃதறிவீர்,
உவ்வினை நாடா திருப்பதும்
உந்தமக்கு ஊன்மன்றே!”

வாய்த்த பிறப்பிற்கு ஏற்ப முறையாக வாழும் ஆர்வம் வேண்டும். ஆன்ற அறிவு வேண்டும். ஆக்கம் பல நல்கும் ஆள்வினை வேண்டும்.