பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



அறிவு எது? கற்ற கல்வி அறிவாகுமா? தகவல்களும் செய்திகளும் தெரிந்தால் அறிவாகுமா? தொடுத்த வினாக்களுக்கு விடை சொல்லுவது அறிவாகுமா? இல்லை, இல்லை! இவையெல்லாம் அறிவின் வாயில்கள். நல்ல பயன்களைத் தருவது அறிவு. நல்ல காரியங்களை நாளும் நாடிச் செய்தல் அறிவு. ஊக்கம் கைவிடாதது அறிவு. சூழ்நிலைகளை அறிவு வென்று விளங்கும். கவனமான உழைப்பு, உறுதியான உழைப்பு அறிவுக்கு அடையாளம்!

அறிவுக்கு வாயில்கள் பலப்பல. ஆனாலும் அறிவு வெளிப்பட்டுத் தோன்றும் களம் சிந்தனை! கல்வி, கேள்வி, செயல் ஆகியன அறிவின் வாயில்கள்! கற்ற அறிவு, கேட்ட அறிவு, நுண்ணறிவு, பட்டறிவு என்று அறிவு பலப்பல. நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை, தன் வாழ்க்கையின் நிகழ்வுகளை அறிவுப் பாங்குடன் அணுகுவது அறிவு; அறிவியல். எந்த நிகழ்வுக்கும் எது அடிப்படை? காரணம் எது? காரியம் எது? பயன்பாடு என்ன? என்றெல்லாம் ஆய்வு செய்து வாழச் செய்தல் அறிவுதான்!

வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் நிகழ்வுகள்! தீமைகள்! துன்பங்கள்! ஒவ்வாமைகள்! இவைகளைத் தாங்கிக்கொண்டு அனுபவிப்பதா? அல்லது போராடி வெற்றி பெறுவதா? இந்த வினாக்களுக்குரிய விடையில்தான் அறிவின் மாட்சி புலப்படும். “துன்பங்களும் துயரங்களும் இயற்கை, வினைப் பயன். இவைகளை அனுபவித்துத்தான் தீரவேண்டும்! தீர்வே இல்லை” - என்று மூடத்தனத்தில் மூழ்கி அழுது அழுது வாழ்தல் அறியாமை. வாழ்வதற்குப் பதில் வாழ்க்கையைத் துாக்கிச் சுமப்பது அறியாமை.

அறிவு

மனிதன் - மனிதகுலம் அறியாமையிலிருந்து விடுதலை பெறவேண்டும். மனிதன் அறிவுப் பிராணி. ஆனால், இயல்பாக அறியாமையில் கிடந்துழல்கின்றான். ஏன் இந்த