பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அமைப்பே உடல் அமைப்பு. வாய் கூடப் பிறருடன் பேசத்தான். நமக்கு நாமே பேசிக் கொண்டால் ஐயப்படுவார்கள். ஆனால் நடைமுறையில் நமக்கு மற்றவர்களுடன் உள்ள உறவு தளர்கிறது.

ஒருவர் மற்றொருவரிடம் பழகி வாழ்க்கையில் வெற்றி பெறவேண்டுமெனில் எதிர்பார்ப்புக்கள் இல்லாத அன்பு காட்டவேண்டும். நோன்பு என்றால் என்ன? இன்று உண்ணாது, உறங்காது வாழ்தலே நோன்பு என்று கருதுகின்றனர். இல்லை, இல்லை!

"தனக்கென முயலா நோன்றான்
பிறர்க்கென முயலுநர்”

என்று புறநானுறு கூறும். பிறர்க்கென முயன்று உதவி செய்தலே நோன்பு, இதனை பாரதி

"ஊருக்கு உழைத்திடல் யோகம்”

என்றான். ஆதலால் உறவு வளர வேண்டுமாயின் தன் முனைப்பும் தற்சார்பும் இன்றி வாழ்தல் வேண்டும். இதுதான் வாழும் முறைமை. பலருடன் கூடி வாழும் வாழ்க்கையில் ஏமாற்றங்களும் இழப்புக்களும் இருந்தால்கூட ஏற்றுக் கொண்டு அன்பு காட்டவேண்டும்; உறவு பேணவேண்டும்?

நம்முடன் பழகுபவரின் குணநலங்களையும் புரிந்து கொள்ள வேண்டும். நட்பு, உறவு, நீதி, சட்டம், பக்தி முதலியன கூடக் குறுக்கிடக்கூடாது. உறவுக்கு அடுத்த இடத்தில்தான் இவையெல்லாம்! ஏன்? உறவுகள் நல்ல வண்ணம் பராமரிக்கப் பெற்றால்தானே நீதியை எடுத்துக் கூறமுடியும்! அவரும் கேட்பார். உறவு கெட்டுப்போன நிலையில் சொன்னால் முதலில், சொல்பவர் மீது சந்தேகம்!, ஆதலால், சொல்லும் நீதியிலும் ஐயப்பாடேதோன்றும்! அதனால்தானே சிவபெருமான் சுந்தரர் செய்த துரிசுகளுக்கு உடந்தையாக இருந்தார்.