பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கடந்த உறதிமொழி எதுவும் கட்சிகள் தரக்கூடாது. தேர்தலில் கூட்டணிகள் நிற்க அனுமதிக்கக்கூடாது. தேர்தலில் கூட்டணி அமைத்து நிற்க வேண்டியிருப்பின் ஒரே தேர்தல் அறிக்கை அடிப்படையில் நிற்கவேண்டும். மந்திரி சபையும் கூட்டணி மந்திரி சபையாக இருக்க வேண்டும். தேர்தலில் அளிக்கப்பெற்ற வாக்குகளில் 50% வாக்குகள் பெறாத கட்சிகள் ஆட்சி அமைக்க அனுமதி இருக்கக்கூடாது. தேர்தல் வாக்குகள் எண்ணிக்கை தொகுதி வாரியாக எண்ணுதல் கூடாது. இந்தச் சில சீர்திருத்தங்களைச் செய்தால்கூடப் போதும்! நமது நாட்டில் மக்களாட்சி சிறக்கும்.

சமயவியல்

இன்று நம்மிடையே நிலவும் மதங்கள், சமயங்கள் அனைத்தும் உண்மையிலிருந்து நீண்டதூரம் விலகி வந்து விட்டன. இன்றைய மதங்கள் நம்பிக்கையை மட்டுமே நம்புகின்றன. ஆனால், உண்மையில் சமயம் ஆய்வு நெறிகளைச் சார்ந்தது தான்!

"நானார் என் உள்ளமார் ஞானங்களார்
என்னையார றிவார்
வானோர் பிரானென்னை ஆண்டிலனேல்
மதிமயங்கி
ஊனார் உடை தலையில் உண்பலிதேர்
அம்பலவன்
தேனார் கமலமே சென்று தாய்
கோத்தும் பீ!

என்று ஆய்வுநெறி வகுத்துத் தருகிறது திருவாசகம்.

திருஞானசம்பந்தரும்

"ஏதுக்கு ளாலும் எடுத்த மொழியாலும் மிக்குச் சோதிக்க வேண்டா"