பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நெருங்கிய பின்பே வண்ணம் தோன்றும். இறைக்காட்சி அப்படியல்ல. வண்ணம் காட்டினார். வடிவு காட்டினார்....மலர்க்கழல்கள் காட்டினார் என்று முறை வைத்துப் பேசுகிறார் மாணிக்கவாசகர்.

பஞ்ச பூதங்களில் நெருப்புக்குத் தனி ஆற்றல் உண்டு. நிலம், நீர், காற்று யாவும் அசுத்தத்தோடு சேர்ந்தால் தாமும் தமது தூய்மையை இழக்கும். தீ மட்டும் தன்னைச் சார்ந்த அசுத்தத்தை மாசுகளை எரித்துத் தனது தூய்மையையும் காப்பாற்றிக்கொள்ளும் இத்தகைய தீ ஒளியைத்தான்..... அனற்பிழம்பைத்தான் "சோதியே” என்கிறார். கார்த்திகை அன்று நாம் ஏற்றுகிற சொக்கப்பானை இதன் அறிகுறிகள்.

"பொய்யினைப் பெருக்கிப் பொழுதினைச் சுருக்க” என்று எம்பெருமான் பாடுகின்றார். மாணிக்கவாசகரைப் பொறுத்தவரை இது உண்மையல்ல....மாணிக்கவாசகர் போன்ற சிவஞானச் செல்வர்கள் பிறர் மீதுள்ள குற்றத்தைத் தன்மீது ஏற்றிச்சொல்வது மரபு. அம்மரபின் வழிப்பட்ட தாகவே இதனைக் கருதவேண்டும்.

"வாழ்க்கையில் அறியாமைகூடப் பிழையல்ல. அறியாமையை அறிவு என்று நினைத்துக்கொண்டு மயங்குவதுதான் பெருந்தவறு என்று குறிப்பிடுகிறார் மாணிக்கவாசகர்.” குடும்பங்களைவிட நாடு வேண்டும் என்பார் சிலர்; குடும்பமே பெரிதென மதிப்பார் சிலர் நாடும் வீடும் சேர்ந்த வாழ்வே நலமுடைய வாழ்வு. அவ்வாறு நாடும் குடும்பமும் வாழ்வதற்குரிய பிரார்த்தனை தான் பாவை நோன்பு.

நாடு செழிக்க மழை வேண்டும். பெண்கள் வானமழை வேண்டி நோன்பிருந்தார்கள். இதையே மாணிக்கவாசகர் "எம்பிராட்டி அருளே என்னப் பொழியோல் ஓர் எம்பா வாய்" என்று பேசுகிறார். மழை, வேண்டுவார் வேண்டாதார்