பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமயவியல் கட்டுரைகள்

151


என்று பார்ப்பதில்லை. அதுபோல, எம்பிராட்டி அருளுக்குக் காலம்.கருத்து வேறுபாடு...... எல்லைக்கோடு இவை இல்லை.

பொதுவாக மனையற வாழ்க்கையும், பிறவும் இடையிலே ஒரு சாதனம்தான். இலட்சிய வாழ்க்கையுடைய ஒரு பெண் பிறவி விடுதலையையே விரும்புகிறாள். அந்தப் பிறவி விடுதலைக்கு, இலட்சியத்தோடு ஒத்த கணவன் வேண்டும் என்கிறாள். இன்ப துன்பங்களுக்குக் கட்டுப்பட்ட பிறவித் துன்பத்தினின்றும் விடுதலை பெறுவதுதான் அவளது இலட்சியம். அதனால்தான்,

"எங் கொங்கை நின் அன்பர்
அல்லார் தோள் சேரற்க

எங்கைகள் நினக் கல்லாது

எப்பணியும் செய்யற்க”

என்று வேண்டுகின்றார். நோன்பிலும் தவத்திலும் சிறந்த பழைய சிவனடியார்களை நோக்கி, "புத்தடியோம் புன்மை தீர்த்தாட் கொண்டாற் பொல்லாதோ?” என்று விண்ணப்பிக்கின்றார்.

ஒரு மாம்பழ விற்பனைக்காரி;பழங்களைப் பறிக் கிறாள்; பறிக்கும்போது பிஞ்சுகளும் காய்களும் விழுந்து விட்டன. எல்லாவற்றையும் சேர்த்துச் சந்தைக்குக் கொண்டு போகிறாள். வந்தவர்கள் பழங்களையே வாங்கிச் செல்கின்றனர். இன்னும் ஒரே ஒரு பழம்தான் இருக்கிறது-அத்தோடு காய்களும் பிஞ்சுகளும் இருக்கின்றன. பெரிதும் ஏக்கமடைகிறாள். சமுதாய நாகரிகம் படைத்த ஒருவன் வருகிறான். அவன் காயையும், பிஞ்சையும் சேர்த்து வாங்கிச் செல்லுகிறான். காய் பச்சடிக்கும், பிஞ்சு ஊறுகாய்க்கும் உதவும் என்று கருதி அவன் அவற்றை வாங்கிச் செல்லுகிறான்.

மாணிக்கவாசகர் அமைச்சராக இருந்தார். கோவில் திருப்பணி செய்தார்.எனினும் புளியம்பழம்போல பற்றற்று