பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமயவியல் கட்டுரைகள்

175


கிடக்கும் சமுதாயத்தை ஒன்றுபடுத்தி எல்லோரும் இன்புற்று வாழப் பணி செய்வதிலே ஜனநாயகத்திலும் சமயக் கொள்கை சாலவும் உயர்ந்தது.

மக்களை மக்களாக மதிக்கச் சொல்லிக் கொடுப்பது ஜனநாயகம். மக்களைக் கடவுளாக மதித்து அன்பு செய்யக் கற்றுக் கொடுப்பது சமயம். தன்னோடு ஒப்பாக நினைப்பதிலும், தன்னிலும் உயர்ந்ததாக மதிப்பிடுதல் பெரிதும் நன்மை பயக்கும் என்பதற்கும் ஐயமுண்டோ?

"மக்களுக்குச் செய்யும் தொண்டு மகேசுவரனுக்குச் செய்யும் தொண்டு" என்பார் திருமூலர். வருவோர்களுக்கெல்லாம் உண்டி கொடுத்தோர், உடைகொடுத்தோர் இன்னும் பிற வேண்டுவன வெல்லாம் செய்தார்கள் சைவச் செல்வர்கள். இத்தகு தொண்டின் விளக்கங் கூறுவதே திருத்தொண்டர் புராணம் எனும் திரு நூல். "எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன் றறியேன் பராபரமே” என்பது உண்மைச் சமய வாழ்வு வாழ்ந்த சான்றோரின் திருவுள்ளம். எனவே, மக்களை மக்களாக மதிக்கும் ஜனநாயகமா, மக்களைக் கடவுளாக மதித்து அன்பு செய்யச் சொல்லும் சமயமா, இவற்றுள் எது உயர்ந்தது?

7. அன்பும் அருளும்

மக்களை மக்களாக வாழ்விப்பது அன்பும் அருளு மேயாம். நாச சத்திகள் தலைகாட்டாத வண்ணம் தடைசெய்து இன்பத்தை வழங்குவது அன்பும் அருளுமேயாம். மக்களை நன்னெறியில் அழைத்துச் செல்வது அன்பும் அருளுமேயாம், இவ்விரு அருமை மிகு உணர்ச்சிகளை மக்கள் இழப்பராயின் நரகத்தின் நிரந்தர உரிமையாளர்களாகி விடுகின்றார்கள். "அருளும், அன்பும் நீக்கி நீங்கா நிரயம் கொள்பவர்" என்று புறநானூறு பேசுகின்றது. அத்தகையாரோடு இணங்கற்க