பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமயவியல் கட்டுரைகள்

209



நாளென் செய்யும்? வினை
       தானென் செய்யும்? எனை நாடி வந்த
கோளென் செய்யும் கொடுங்
       கூற்றென் செய்யும்? குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கயுைம்
       தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும்
       எனக்கு முன்னேவந்து தோன்றிடுனே

என்ற பாடல் மூலம் விளக்குகிறார். வாழும் சமுதாயத்திற்கு-மனித குலத்திற்கு வாழும் வழியை-நீண்ட கால இலட்சியத்தைக் கற்றுக் கொடுத்த ஞானி அருணகிரியார். அவர் பாடலைப் பாடித் திருவருள் இன்பம் பெறுவோமாக.

15. விவேகானந்தரின் அடிச்சுவட்டில்
1

மானுடத்தின் வரலாற்றில் பழமைப் பற்றாளர்களுக்கும் புதியன வேட்பாளர்களுக்கும் காலங்காலமாக மோதல் நடந்து வந்துள்ளன. ஒருசில சமயங்களில் பழமை வெற்றி பெற்றதுண்டு. ஆனால், புதுமையே தொடர்ந்து இயக்க நிலையில் வெற்றி பெற்று வருகிறது; வளர்ந்து வருகிறது. பழமை நைந்துபோன துணி போல உடுத்தப் பயன்படாது. புதுமை வாழ்க்கையை உயிர்ப்புடன் இயக்கும் தன்மையுடையது. மாணிக்கவாசகர் புதுமையை வரவேற்றுப் பாடியுள்ள பாடல் படிக்கத்தக்கது.

"முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம்பொருளே!
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும்அப் பெற்றியனே!"

என்ற திருவாசக வரிகள் கவனத்துடன் படிக்கத்தக்கவை. கடவுள் பழம்பொருள்! கால எல்லைகளைக் கடந்த பழம்