பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமயவியல் கட்டுரைகள்

211


கின்றன. உயர்வு தாழ்வுகளை நிலைப்படுத்தும் முயற்சிகளில் "பீடங்கள்" தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இன்றைய சூழ்நிலை பொதுவாக நன்றாக இல்லை! எந்த ஒரு நல்ல கொள்கைக்கும் எதிர்ப்பு! ஏன்? சமுதாய முரண்பாடுகள் பூதங்களாகக் காட்டப்படுகின்றன. இல்லை, இல்லை! முரண்பாடுகள் உருவாக்கப்படுகின்றன! இந்தச் சூழ்நிலையில்,

சாதி ஒழிப்பு!
தீண்டாமை ஒழிப்பு!
சுரண்டல் முறை ஒழிப்பு!
ஆதிக்க முனைப்புக்கு எதிர்ப்பு!

ஆகிய இன்னோரன்ன உயரிய கொள்கைகளைக் கூட மூர்க்கத்தனமாகத் தாக்குகின்றனர் பழமைவாதிகள்! அவர்கள் சாவா? வாழ்வா? என்ற போராட்டத்திற்குத் தயாராகி விட்டனர்.

கடவுள் பொது! கடவுள் மானுடத்தின் தந்தை! எழுந்தருளியுள்ள திருக்கோயில் மானுடத்தின் பொது வீடு! இதுதான் சமயம்! ஆனால், கடவுளுக்கே சாதிகளைக் கற்பித்துப் பேணுகின்றன. மதபீடங்கள்! கடவுளை, கடவுள் திருமேனியைத் தொட, பூசனை செய்ய - அனுபவித்து அழக்கூட எல்லா மாந்தருக்கும் உரிமை இல்லை! கடை கோடி மனிதன் - கடைகோடி மனித சமுதாயத்தினர்த் தீண்டத்தகாதவர்களாகப் பலநூறு ஆண்டுகளாக வைக்கப் பட்டுள்ளனர். இந்த நிலை மாற வேண்டும் என்று எழுதினால், பேசினால் பீடங்கள் எதிர்க்கின்றன.

இன்றைய உலகின் நிலை இதோ! இதயம் இருப்பின் எண்ணுங்கள்! -

பட்டினி கிடப்போர் 50 கோடி
பிணிவாய்ப்பட்டோர் 150 கோடி
பஞ்சத்தில் தவிப்போர் 100 கோடி