பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

222

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வாயில்களை உருவாக்காமல், பொருளை ஈட்டாமல் சிக்கனப்படுத்துவது நல்ல பழக்கமல்ல. நாள்தோறும் பொருள் வருவாய்க்குரிய புதிய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். செயல் செய்து கொண்டே போனால் பொருளின் தேவை இருக்கத்தான் செய்யும். பொருளின் தேவையே மனிதனை, பொருள் இயற்றும் முயற்சியில் ஆற்றுப்படுத்தும். பொருள் இயற்ற எடுத்துக் கொள்ளும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். இதுவே சுவாமி விவேகானந்தரின் அறிவுரை.

"தொண்டுக்குப் பணம் ஒரு பிரச்சனை அல்ல. தொண்டினைத் தொடங்கு தொடர்ந்து செய்; பொருள்கள் தாமே வரும்” என்றார் சுவாமி விவேகானந்தர்.

14. தமிழ்நெறியும் லெனினியமும்

1

தமிழினம் கல் தோன்றி மண் தோன்றக் காலத்தே தோன்றி வளர்ந்து வாழ்ந்துவரக் கூடியது. தமிழரின் தாய் மொழியாம் தமிழ், காலத்தால் மூத்தது; கருத்தாலும் மூத்தது. தமிழ் காலத்திற்குக் காலம் தேவையான இலக்கியங்களைப் பெற்றுச் செழித்து வளர்ந்த செம்மொழி. தமிழிலக்கிய உலகத்தில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய காலத்திலிருந்து நமக்கு இலக்கியம் கிடைத்திருக்கிறது; சிந்தனை தெரிகிறது. அச்சிந்தனை உலகம் வளர்த்து வந்திருக்கின்ற வகையும் விளங்குகிறது. இன்று கிடைத்திருக்கின்ற தமிழிலக்கிய மரபில் முற்போக்குச் சிந்தனையே மேம்பட்டு விளங்குகிறது. இருபதாம் நூற்றாண்டில் நின்று வாழ்கின்ற நாம், இரண்டாம் நூற்றாண்டில் அல்லது ஏழாம் நூற்றாண்டில் இருபதாம் நூற்றாண்டின் தீவிரத்தை-அப்படியே அதே உருவத்தில் எதிர் பார்க்க முடியாது. வரலாற்றுப் பார்வையில் அப்படி எதிர் பார்க்கவும் கூடாது. ஆனால், அந்தக் கருத்துக்கள் தோன்றிய