பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமயவியல் கட்டுரைகள்

241


செல்வதேயாகும். எங்கு பார்த்தாலும் கூட்டு வழிபாட்டு இயக்கங்கள் தொடங்கப் பெற்றன. இளைஞர்கள் முதல் பெரியோர்களும் ஆர்வம் நிறைந்த உள்ளத்துடன் ஆங்காங்கு வழிபாட்டு இயக்கத்தில் ஆர்வத்தோடு பங்கு கொண்டனர். அது மட்டுமன்றி ஈரோடு போன்ற நகரங்களில் உள்ள திருக் கூட்ட ஊழியர்கள் ஞாயிறு தோறும் அயல் இடங்களுக்குச் சென்று வழிபாட்டு வளர்ச்சியை மக்களிடையே வளர்க்கும் திருப்பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆண்டுதோறும் கால்நடை யாத்திரையாகவும் பல ஆண்களும் பெண்களும் பல சிற்றூர்களுக்கும் பேரூர்களுக்கும் நடந்தே சென்று திருத்தல யாத்திரை செய்து கிராமங்களிலும் நகரங்களிலும் ஒரு பெரிய எழுச்சியை உண்டாக்கினர். எங்கும் திருவாசக விழாக்கள் எடுக்கப் பெற்றன. தமிழ்நாட்டில் ஆயிரக் கணக்கானவர்கள் திருக்கோயிலுக்குச் செல்லும் உணர்ச்சியையும் திருவாசகம் படிக்கும் உணர்ச்சியையும் பெற்றனர் என்பது மிகையன்று. 1952-இல் மாத்திரம் திருவாசக சிவ புராணப் பிரதி மட்டும் கிட்டத்தட்ட ஒரு இலட்சம் பிரதி களுக்கு மேல் விற்பனையாயிருக்கிறது என்று சொன்னால் இயக்கத்தினுடைய எதிரொலி நாம் புரிந்து கொள்ளக் கூடியதேயாகும். இன்னும் ஆங்காங்கு நடைபெறுகின்ற கூட்டு வழிபாட்டு இயக்கங்களில் ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் கலந்து கொண்டு பயன்பெறுகின்றனர்.

திருக்கோயில் திருப்பணி

இங்ஙணம் வழிபாட்டுத் துறையில் ஆர்வத்தோடு வேலை செய்த இயக்கம் ஆங்காங்கு கவனிப்பாரற்றுக் கிடந்த திருக்கோயில்களின் மீது கவனம் செலுத்தியது. ஆங்காங்கு ஊழியர்கள் உழவாரப் பணியைச் செய்து, செடி கொடிகள் முளைத்து, அதன் மூலம் சிதைய இருந்த திருக்கோயில்களைக் காப்பாற்றினர். மதுரையில் இம்மையில் நன்மை தருவார் திருக்கோயிலில் ஆண்டுகள் பலவாகத் தூர்ந்து கிடந்த திருக்குளத்தைச் சுத்தம் செய்த திருப்பணி தமிழகம் மறக்க