பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமயவியல் கட்டுரைகள்

243


இயக்கத்தைப் பின்பிற்றுபவர்கள் என்பது புரிய வந்தது. அதுமட்டுமன்றி அங்கு அவர்கள் வசிக்கும் தெருவில் உள்ள பழுதடைந்த பிள்ளையார் கோயில் ஒன்றை இளைஞர்களாகச் சேர்ந்து களிமண்ணால் அடைப்புக்கள் அடைத்து அந்தக் கோயிலைப் பாதுகாத்து அவர்களே நாள்தோறும் முறை வைத்து வழிபாடு செய்யும் சேதியை அறிந்தோம். இந்த அளவுக்கு இளைஞர்களையும் அருள்நெறி இயக்கம் கவர்ச்சித்திருந்ததைக் கண்டு மிகவும் மகிழ்ந்தோம். அந்த இளைஞர்களுடைய வழிபாட்டுணர்ச்சியை ஊக்குவிக்கும் பொருட்டு அப்பழுதுற்ற கோயிலைத் தக்க அன்பர்களைக் கொண்டு புதிதாக திருப்பணி செய்து கும்பாபிடேகமும் நடத்தப் பெற்றது. சாத்துரர் தாலூகாவில் ஒருமுறை நாம் சுற்றுப் பிரயாணம் செய்து கொண்டிருந்த பொழுது, ஒத்தையால் என்ற கிராமத்திற்குச் சென்றோம். அக்கிராமத்தில் ஒரு சர்ச்சைத் தவிர இந்துக்கள் வழிபாட்டிற்கு என்று ஆலயம் இல்லாதிருந்தது. இல்லை, இல்லை. ஒரு திருமால் ஆலயம் ஒன்று ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக புழக்கமன்னியில் பூட்டி செடி கொடிகள் முளைத்துச் சிதைந்து இருந்தது. அன்று மாலையே ஊழியர்கள் அந்தக் கோயிலுக்குள் நுழைந்து செடி கொடிகளை வெட்டி அப்புறப்படுத்தி சுத்தம் செய்தனர். அன்று முதன் முதலாக நாமே அந்தக் கோயிலுக்கு விளக்கேற்றி முதலில் வழிபாடு செய்தோம். அந்தக் கோயில் இப்பொழுது இயக்க ஆதரவாளர்களாலும் ஊழியர்களாலும் திருப்பணி செய்யப் பெற்று வருகின்றது. இயக்கத்தினுடைய திருப்பணிகளில் சில முக்கியமானவற்றையே நினைவு படுத்தினோம்.

சமுதாயத் தொண்டு

இங்ஙனம் சமயத்துறையில் வேலை செய்த அருள் நெறித் திருக்கூட்டம் சமுதாயத்தை மறந்துவிடவில்லை. சமுதாயத்தை சரியான மனப்பாங்கில் அமைத்துக் கொண்டால்தான் சமயவேலை ஒழுங்காக நடைபெறும்