பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமயவியல் கட்டுரைகள்

245


ஆக்கம் தர வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது. அதற்கென 1955 ஜூன் மாதம் அருள்நெறி திருப்பணி மன்றத்தைக் கண்டோம். கல்வி வசதி செய்து கொடுத்தல், மருத்துவ வசதி செய்து கொடுத்தல், திக்கற்ற குழந்தைகளை வளர்த்தல், ஏழை மாணவர்களுக்குப் படிப்புக்குரிய வசதி செய்து கொடுத்தல் முதலிய நிர்மாண வேலைகள் செய்வதே திருப்பணி மன்றத்தின் நோக்கம். திருப்பணி மன்றம் தொடங்கி சற்றேறக் குறைய மூன்று வருடங்களேயாகின்றன. எனினும் அதனுடைய வளர்ச்சி நம்மவர்கள் பெருமைப் படத்தக்க அளவுக்கு உயர்ந்திருக்கிறது. இம்மன்றத்தின் சார்பில் திக்கற்ற குழந்தைகள் இல்லங்கள் மூன்று, அரிஜன் மாணவர் விடுதிகள் இரண்டு, ஆசிரியர் பயிற்சிப் பள்ளி ஒன்று, ஆசிரியை பயிற்சிப் பள்ளி ஒன்று, உயர்தர ஆரம்பப்பாட சாலை நான்கு, ஆரம்பப் பாடசாலைகள் ஆறு ஆகிய நிறுவனங்கள் தற்பொழுது சீரிய முறையில் நடந்து வருகின்றன. மேலும் இராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டு மருத்துவ நிலையங்களுக்கு வாடகையின்றி இடம் அமைத்துக் கொடுத்திருக்கின்றோம். கல்லூரி பயிலும் இளைஞர்கள் உதவிச் சம்பளம் பெறுகின்றனர். திருப்பணி மன்றத்தின் உதவி பெற்று இரண்டு இளைஞர்கள் கல்லூரிப் படிப்பு முடித்து வெளிவந்திருக்கின்றனர் என்பது நாம் அறிந்ததே.

வெளியில் நடந்த அதிசயம்

இங்ஙனம் சமுதாய, சமயத் துறைகளில் மொழி உணர்ச்சியோடு நாம் செய்துவந்த நிர்மாண வேலை மக்கள் மன்றத்திலே ஒரு பெரிய மாறுதலை ஏற்படுத்தியது. ஏன்? நமக்கு கருத்திலே மாறுபட்ட இயக்கங்களாகிய திராவிட கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், பொதுவுடைமைக் கட்சி முதலிய இயக்கங்கள் கூட நம்முடைய வேலையைப் பார்த்து, அத்துறையில் நம்மோடு தொடர்பு கொள்ள முன்வந்தன. குறிப்பாக திராவிட கழகத் தலைவர் ஈ.வெ. இராமசாமிப் பெரியார் அவர்கள் நம்முடைய