பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

258

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சொல்லி விட்டார்? இவைகள் எல்லாம் அளவு கோல்கள் இல்லை என்று சொல்லிவிட்டார். சில பிணம் வீட்டிலேயும் இருக்கும். சாப்பிடும்; நடக்கும். எல்லாம் செய்யும். ஆனாலும் பிணம் தான் என்கிறார். உயிர் இல்லை என்கிறார். உயிர் இருக்கிறது என்பதற்கு அடையாளம், அவர்களுடைய வாழ்க்கையிலே அன்பு சார்ந்த பழக்கங்கள் இருக்க வேண்டும்.

இந்த உயிர் எங்கே இருக்கிறது என்று கேட்டால் நிறையப் பேருக்குச் சொல்லத் தெரியாது. சொல்லத் தெரியாததினால் உயிரே இல்லை என்று சொல்வி விடுகிறார்கள். வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு இவை மூன்றும் சேர்ந்தால் சிவப்பாக ஒரு நிறம் வருகிறதல்லவா? அதுபோல, இந்தப் பஞ்ச பூதங்கள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்தால், அது ஆடும்; பாடும்; ஓடும்; நடக்கும். அவ்வளவு தான்! உயிர் என்று ஒன்று இல்லை. எல்லாம் கற்பனை என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். ஆனால், அந்த வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு எல்லாம் சேர்ந்தால் ஒரே மாதிரி சிவப்பாக வருகிறதே, ஆனால், எல்லா உயிரும் ஒரே மாதிரி இல்லையே! அதனுடைய உயரம், நிறம், பேச்சு, நடை, உடை, பாவனை, குணம் இவற்றில் பேதங்கள் எத்தனை உண்டோ அத்தனை பேதங்களும் இருக்கின்றன. வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பைக் கூட்டினால் நிறம் வருகிற மாதிரி என்று எப்படிச் சொல்ல முடியும்? ஆதலால், உயிர் உண்டு என்பது நம்முடைய நாட்டுக் கொள்கை.

ஆனால், உயிர் எங்கே இருக்கிறது? சில பேருக்குச் சோற்றிலே உயிர் வைத்திருப்பார்கள். அவன் சாப்பிடவில்லை என்று சொன்னால் இறந்து போய் விடுவான். ஆகவே பொழுது விடிந்து, பொழுது போனால் சாப்பாடு; சாப்பாடு. அவன் அதற்காகவே பிறந்திருக்கிற மாதிரி, தேடித் தேடி அலைந்து கொண்டிருப்பான். சோற்றிலே உயிர் இருக்கும். இன்னும் சில பேருக்கு உயிர் வேறு இடத்திலே