பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமயவியல் கட்டுரைகள்

259


இருக்கும். ஒருவர் நல்ல பணம் சம்பாதித்து வங்கியிலே போட்டு வைத்திருப்பார். அந்த வங்கி திடீரென்று "திவால்" ஆகிவிட்டது. "திவால்” ஆகிவிட்டது என்றால் தெரியுமல்லவா? நொடிந்து போயிற்று. பெரிய இடத்தில் பணம் சேர்ந்தால் நொடிக்கும். நொடிக்க வைத்து விடுவார்கள். அது நொடிந்து போயிற்று. நொடிந்து போனவுடனே, இந்தப் பணம் போட்டிருந்த ஆளுக்கு, அந்த வங்கி நொடிந்து போனது என்ற செய்தியைப் பார்த்ததால் உடனே மூச்சு நின்று போயிற்று. அப்படியென்றால், அந்த ஆளுக்கு உயிர் எங்கே இருந்தது? பணத்திலே இருந்தது. எனவே, சிலருக்கு உயிர் சோற்றிலே இருக்கிறது; சிலருக்குப் பணத்திலே இருக்கிறது.

இன்னும் சிலர் இருக்கிறார்கள்? மிகவும் உயர்ந்தவர்கள். ஒரு நல்ல அரசர் தமிழ்நாட்டிலே ஆண்டார். பாண்டிய நாட்டை ஆண்டார். அவனுடைய நாட்டிலே ஒரு காலத்திலே ஒரு தவறு நடந்துவிட்டது. ஓர் ஆளை ஏன் என்று கேட்காமல் என்னவென்று கேட்காமல் கொன்று விட்டார். அந்த அரசன் கொன்ற உடனே, கொல்லப்பட்டவனின் மனைவி அரச மன்றத்திற்கு வந்து வழக்குத் தொடுத்தாள். "என் கணவன் தவறு செய்யாதவன்; அவனைக் கொன்று விட்டாயே" என்று வழக்குத் தொடுத்தாள். அரசனுக்கு உண்மை தெரிந்தது. தவறு செய்து விட்டோம் என்ற உண்மை தெரிந்தது. உண்மை தெரிந்தவுடன் அவன் அழவில்லை; புலம்பவில்லை; ஆத்திரப்படவில்லை. உண்மையில் தான் தவறு செய்து விட்டோம் என்று தெரிந்தவுடனே அவனுடைய உயிர் பிரிந்து விட்டது. அவன் அரியணையிலிருந்து அப்படியே கீழே விழுந்து விட்டான்; இறந்து விட்டான்! அப்படியென்றால், அவனுக்கு உயிர் எங்கே இருந்தது? நீதியில் இருந்தது. அரசே நீதியில் தங்கி இருந்தது. இப்பொழுதெல்லாம், அப்படியானால் 'என்ன செய்வது? நஷ்டஈடு வாங்கிக் கொள்ளுங்கள்; அதைச் செய்து