பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

264

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தேங்காய்களை ஈன்ற தென்னை மரமே! உனக்கு நன்றி" என்று சொல்வார்களா?

இப்பொழுது நிகழ்ச்சி நிரலில் போட்டிருக்கிறார்கள். "நன்றி கூறல்" நான் அரை மணி நேரம் பேசி விட்டுப் போனால் நன்றி சொல்வர்கள். "அடிகளார் அவர்களுக்கு நன்றி; சமக்காளம் விரித்தவர்களுக்கு நன்றி, ஒலி பெருக்கி அமைத்தவர்களுக்கு நன்றி,” என்று சொல்லுவார்கள். தென்னை மரத்திற்குப் போய் நன்றி சொல்வதில்லை. காய்ப்பது என்பது அதனுடைய கடமை. காய்த்தவுடன் காய்களை உதிர்ப்பதும், வேண்டியவர்களுக்கும், தேவையான வர்களுக்கும் கொடுப்பது அதனுடைய கடமை. எனவே, தென்னை மரம் வளர்ந்தால் நிச்சயமாகப் பலன் தரும், என்ற உத்திரவாதம் இருக்கிறது. ஒரு மரத்தைக் கூட அநாதையாக விடாமல், 'கோர்ட்' வரை போய்ப் பாதுகாக்கிறோம்.

இந்த மனிதனை அப்படி வளர்த்தால் பாதுகாப்பார்கள் என்ற நம்பிக்கை யாருக்குமே இருப்பதில்லை. சில தாய்மார்களுக்குக் கூடத் தங்கள் பிள்ளைகள்மேல் நம்பிக்கை இருப்பதில்லை. அப்படியே வைத்துக் கொண்டு, சோறூரட்டி, சீராட்டி பழகுகிறபொழுது "நீ பெரிய பிள்ளையாகி சம்பாதிக்கிற பொழுது எனக்குக் கொடுப்பாயா?” என்று கேட்கிறார்கள். "எனக்குக் கொடுப்பாயா?" என்று கேட்கிற சந்தேகம் ஏன் வருகிறது? கொடுக்கும் என்று ஏன் நம்பவில்லை! இன்னும் சில பேருக்குச் சிறு புத்தியாய் இருந்தால் "எனக்குக் கொடுப்பாயா? அப்பாவிற்குக் கொடுப்பாயா?" என்பார்கள். ஆகவே மனிதர்கள் பெரும்பாலும் சுயநலமாக ஒருவருக்கொருவர் அன்பு காட்டுவது, வளர்ப்பது என்பதெல்லாம் தவிர்க்க முடியாத ஒரு சுயநலத்தின் தேவையின் காரணமாகவுே கூடுகிறார்கள். இந்தத் தேவைகளுக்கு அப்பாற்பட்டு அன்பாக இருப்பது என்பது என்னுடைய கடமை. உதவியாக இருப்பது என்பது என்னுடைய கடமை. இது என்னுடைய ஆன்மாவின்