பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

281


இருக்கிறது என்று கையொலி எழுப்புவார்கள். ஆனால் மார்பைக் காட்டு என்றபொழுது பலர் பின்னே போகிற நிலையைப் பார்க்கலாம்.

அறிவு ஊட்டும் தமிழ் அறிவுக்கப்பால் உணர்வையூட்டுகிற தமிழ், செயல்படுத்தத் தூண்டும் தமிழ் என்று தமிழை முத்தமிழாக, இயல், இசை, நாடகத்தமிழ் என்று பிரித்தார்கள்.

இவற்றை நாம் நமது உரிமையாக்கிக் கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் இருக்கின்ற ஒரே குறை தமிழர்கள் எதையும் சீக்கிரம் ரசித்துத் தலையசைத்துக் கேட்பார்கள். ஆனாலும் அடுத்த நிமிஷத்தில் செயல்படுத்த வரும்பொழுது, அவனுடைய தன்னலம், சுயநலம் குறுக்கே நின்றுவிடும் என்பது அவனுடைய சமுதாயத்திற்குப் பெரும் கேடாக இருக்கிறது என்பதைத் தொடர்ந்து சரித்திரத்தில் பார்க்கிறோம்.

நமக்குத் தேவை இலக்கியத்தை ரசிப்பது மட்டும் அல்ல. எந்த ஒரு வரலாறு ஆயினும், எந்த ஒரு கவிதையாயினும், அதைச் செயல்படுத்த முடிகிறதா என்று தமிழர்கள் பார்க்க வேண்டும்.

தமிழர்களுக்குத் தங்களுக்கென ஒரு மரபு இருக்கிறது என்பதை மறந்துவிடுகிறார்கள்.

எது வந்தாலும் கடைவீதியில் கொள்முதல் செய்வதில் இவர்களைவிடச் சிறந்தவர்கள் யாரும் இருக்க முடியாது. வெகு சீக்கிரமாகக் கொள்முதல் செய்வார்கள்.

அதிலும் ஒரு பெருங்குறை என்னவென்று சொன்னால், தமிழர்கள் எப்பொழுதும் சீக்கிரமாக அடிமைப் படமாட்டார்கள்; நிச்சயமாகப் போர் செய்வார்கள். ஆனால் கொல்லைப் புறங்களின் வழியாக, சாளரங்கள் வழியாக வருகிற சதி இருக்கிறதே, அது அப்பாவித் தமிழர்களுக்குத் கு.XVI 9