பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

286

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வளரவில்லை. அவன் திசைமாறிப் போகிற போக்கை மாற்ற முயற்சிக்கவேண்டும்.

இன்றைக்குத் தமிழ் போதுமான அளவு வளரவில்லை. அறிவியல், பொருளியல், தொழிலியல் மொழியாகத் தமிழ் வளரவேண்டும்.

'பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களைத் தமிழில் பெயர்த்தல் வேண்டும் என்று பாரதி சொன்னான். அன்றைக்கொரு காலத்தில் தத்துவத்தில், அறத்துறையில் தமிழ் சிறந்திருத்தது. அதைப் படித்துப் பயன் பெறுவதற்குப் பல மேல்நாட்டு அறிஞர்கள் வந்தார்கள். இதுபோல் இன்னும் 50 ஆண்டுகள் கழித்துத் தமிழினை ஒரு விஞ்ஞான, அறிவியல், தொழிலியல் மொழியாக ஆக்க வேண்டும் என்ற அளவுக்கு இந்த நூற்றாண்டிற்கு ஏற்றவாறு தமிழை வளர்க்க வேண்டும், காலத்திற்கு ஏற்றவாறு தொண்டு செய்தால்தான் மொழி வளர முடியும்; அப்படியில்லையென்றால் மொழி காலப்போக்கில் சீரழிந்துவிடும்.

இந்த நூற்றாண்டுக்குத் தேவையான அளவிற்குத் தமிழ் வளர்க்கப்படவில்லை. அதற்கான முயற்சி இல்லை. எங்கோ ஒர் இரண்டு முயற்சிகள் நடைபெறுகின்றன.

இதைப் பார்க்கும்போது, இந்த மொழியை உலகத்தோடு உலகமாக வளர்ப்பதற்குரிய முறைகளில் திட்டமிட்டு முயற்சியெடுக்க வேண்டும். அப்போதுதான் தமிழ் எதிர் காலத்தில் வளரும்.

அப்படிப் பார்க்கும்போது நம்முடைய தமிழ் காலத்தாலும் கருத்தாலும் மூத்ததாக இருந்தாலும்கூட இந்தத் தலைமுறையினர்க்கு வேண்டிய சாதனைகளைச் செய்வதற்கு முயற்சிக்க வேண்டும் என்று சொல்ல ஆசைப்படுகிறேன்.

மொழிவழி மக்களை ஒன்றுபடுத்த முடியும். அந்த முயற்சிகளை நாம் உருவாக்கி அதன் மூலமாக நம்முடைய