பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

299


சங்க காலத்திலே தமிழிசைக் கென்றே நூல்கள் இருந்தன என்பதையும், இசை வளர்ச்சியில் மூவர் செய்த தொண்டு மதிப்பிற்குரியது என்பதையும், பண்ணிசையின் கருவூலமாகத் தேவாரங்கள் விளங்குகின்றன என்பதையும், தமிழிசையின் வளர்ச்சிக்கு இயற்றமிழும் இசைத்தமிழும் ஒருங்கே பயின்றவர்களின் தொகை பெருக வேண்டும் என்பதையும் நினைவுபடுத்துகிறோம்.

4.தமிழக எல்லை

தமிழ்ப் பெருங்குடியினர் ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் வாழ்ந்தனர். வரலாற்று அறிஞர்களால் சிறந்த நாகரிக காலமெனப் பாராட்டப்படுகின்ற சிந்துவெளி நாகரிகம் தமிழர் நாகரிகம்; அன்றியும் தமிழக மன்னர்கள் இமயத்தில் கொடி உயர்த்தி ஆண்டனர். வங்கத்தில் தமிழ் அரசர்கள் இருந்து "சேரமரபினர்” என்ற பெயரில் ஆட்சி செலுத்தி இருக்கின்றனர். இராசேந்திர சோழன் கங்கை வெளியிலும் தனது ஆட்சியைச் செலுத்தினான். தமிழக மன்னர்கள் காலத்தில் தமிழ் நாட்டின் எல்லையாக வடக்கே இமயமும் தெற்கே ஈழமும் இருந்திருக்கிறது.

அதற்குப் பிற்காலத்தில் தமிழகத்தின் வட எல்லை வடவேங்கடம். "வடவேங்கடந் தென்குமரி, ஆயிடைத் தமிழ்கூறு நல் உலகத்து" எனப் பனம்பாரனார் கூறுகின்றார். "வேங்கடங் குமரி தீம் புனற் பெளவமென்றிந் நான்கெல்லை தமிழது வழக்கே” என்று சிகண்டியாரும் கூறுகிறார். நமது தேசியக் கவிஞர் பாரதியாரும்,

"நீலத் திரைக்கடலோரத்திலே நின்று
நித்தந் தவஞ்செய் குமரிஎல்லை-வட
மாலவன் குன்றம் இவற்றிடையே-புகழ்
மண்டிக் கிடக்குந் தமிழ் நாடு"