பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

301


கடைத்தெருவில் சென்று பாருங்கள். கீழ்த் தரமான உணர்ச்சியைக் கிளறிவிடும் புத்தகங்கள்தாமே பெரும்பாலும் விற்கின்றன.

மனிதனுக்கு மனிதன் உறவு கொண்டாடுவதற்குத்தான் மொழி: இலக்கியமும் அதற்குத்தான். பலதரப்பட்ட பண்பாடு உடையவர்கள்-உணர்வுடையவர்கள் ஒன்றுபட்டு வாழ வழி செய்யத்தான் இலக்கியம் இருக்கிறது. குறைகள் மறைந்து ஒழிந்து ஒற்றுமை ஏற்படுவதுதான் மக்களாட்சியின் அடிப்படை. ஆனால் அந்த அடிப்படை மறைந்து இன்று பிரிவுகளும், குறைகளுமே எண்ணப் பெறுகின்றன. இலக்கியங்களின் மூலமாக நாம் விரும்பும் சமுதாயத்தைக் காட்டவேண்டும். திருக்குறள் ஒப்புயர்வற்ற சிறந்த இலக்கியம். சமுதாயத்தின் புதிய எழுச்சிகளுக்கெல்லாம் வள்ளுவத்தில் நாம் உரை காணவேண்டும்.

"யான் எனது என்னும் செருக்கு அறுப்பான்
வானோர்க்கு உயர்ந்த உலகம்புகும்”

என்கிறது வள்ளுவம். இதற்கு, யான் என்ற அகப்பற்றையும் எனது என்ற புறப் பற்றையும் விட்டொழிக்க வேண்டும் என்றே உரை காணப்பட்டிருக்கிறது. யான் எனது என்ற உணர்வுகளை நாம் விட்டொழித்து விட்டால் வாழ்க்கையில் சுவை ஏது? எனவே, வாழ்க்கையில் இன்பங்காண, சுவைகான யான் எனது என்ற உணர்வு இன்றியமையாதது. ஆனால், யான் எனது என்ற உணர்வினால் பிறக்கின்ற செருக்கு - ஆணவம் வெறுத்து ஒதுக்கத்தக்கது.

சமய இலக்கியங்களும் சமுதாயத்தைவிட்டு விலகியவை அல்ல. கோவில்களும் திருமடங்களும் சமுதாயத்தின் ஜீவனாக இருந்து வந்திருக்கின்றன. சமய நிலையங்களுக்குப் பொன்னும் பொருளும் குவிய ஆரம்பித்த பிறகு அவற்றை ஆதிக்கம் செலுத்த விரும்பிய சில ஆதிக்கக்காரர்கள் தங்கள் ஆதிக்கத்தில் யாரும் குறுக்கிடாமல்