பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

310

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கண்டு இழித்துப் பேசுகின்றனர். திருவள்ளுவரது திருக்குறளிலுங்கூட முழுவதும் கொள்ளத் தக்கதில்லை, அதிலும் வேண்டாதன உண்டு என்று சொல்லுகின்ற அளவுக்கு ஒரு சில தமிழர்கள் வந்து விட்டதை என்னென்று கூறுவது? இதுவா தமிழன் நிலை: இந்த நிலை வளருமானால் தமிழ் வளருமா? தமிழினம் தலைநிமிர்ந்துதான் வாழ முடியுமா? "நல்ல புத்தகத்தை அழித்தல் கொடுமையிலுங் கொடுமை” என்று மகாகவி மில்டன் கூறுகின்றான். எனவே, பண்டைத் தமிழிலக்கியங்களைப் பாங்குறப் படித்து-வாழ்க்கையில் அமைத்துக் கொள்ளவேண்டியது தமிழரின் தலையாய கடமை.

7. பாரியும் பரமனும்

தமிழகம் வள்ளல் தன்மை நிறைந்த நாடு. சர்தலின் இன்னாதது கொடாது வாழ்வது என்பது தமிழினம் கண்ட முடிபு. தமிழகத்தில் பல வள்ளல்கள் வாழ்ந்தனர். பாரி ஒரு தலைசிறந்த வள்ளல். கொடை மடம் பட்ட வள்ளல். நற்றமிழ் நவில்வோரால் பாராட்டப் பெற்ற வள்ளல். அவன் இன்னார், இனியர் என்றெல்லாம் பாராது பொதுமையான நோக்குடனேயே பொருள் வழங்குகின்றவன். உயிர் அனைத்தும் அவனுக்கு ஒன்று. செடி கொடிக்கும் உயிர் உண்டு என்று இன்று விஞ்ஞானி சொல்லுகின்றான். அன்றே பாரி இதனை உணர்ந்திருந்தான். முல்லைக்குத் தேர் நிறுத்திய வள்ளலல்லவா? "பாத்திரம் அறிந்து பிச்சை இடு" என்பது பழமொழி. ஆனால் இந்தப் பழமொழி பாரிக்கு இல்லை. பாரி எல்லோருக்கும்-மடவருக்கும் மெல்லியருக்குங்கூட வாரி வழங்குவான். அப்படிக் கொடுத்தலையே, தனது கடப்பாடாகவும் உடையவன். இந்த அரிய பண்பாட்டைப் பாரட்ட நின்னத்த கபிலருக்குப் பாரியினுடைய