பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

319


ஏற்புடையனவல்ல என்பார் ஒரு சாரார். எது பழைமை எது புதுமை என்பதிலே இருவருக்குமே திட்ட வட்டமான கருத்தில்லை. திருக்குறள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது என்பதால் இன்று அது பழையதாகிவிடுமா? அது புதுமைக்குப் புதுமையாகப் போற்றப் பெறும் தனிச் சிறப்பு வாய்ந்ததாக விளங்குகிறதே. இன்றே முளைத்ததாயினும் ஒன்று தேவையற்றதாகி விடும்போது அதைப் பழைமை என்று கூறி ஒதுக்கி விடுவதிலே தவறில்லை. இக்கருத்தோடு நாம் திருக்குறளை அணுகினால் அது பழையதாகுமா? பழைமை என்று அதனை ஒதுக்க முடியுமா? புதுமை பழமையைச் சீரழிப்பதாக இருக்கக்கூடாது. அது பழமைக்குச் செழிப்பூட்டுவதாக இருக்கவேண்டும்.

10. குறள் மணம் கமழவேண்டும்

தமிழகத்தில் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே தோன்றி இன்றும் வழக்கில் உள்ளது-போற்றிப் பாராட்டப் பெறுகிறது என்பது திருக்குறளுக்குரிய சிறப்பாகும். இந்நூல் உண்மையிலேயே சிறப்புடையதா? அல்லது காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு என்ற பழமொழியின்படி நாம் அதைச் சிறப்பிக்கிறோமா என்பதை ஆராயவேண்டும்.

திருக்குறளின் கருத்து கால எல்லைக்கு உட்பட்டதல்ல. காலங்கடந்த தத்துவங்களையுடையது அந்நூல். திருக்குறள் சாதி, இன, மொழி, நாடு வரையறைகளைக் கடந்து உலகம் தழீஇய பொது நூல். அது மனித குலத்தின் நீதிநூல்.

வள்ளுவத்தில் அதிசயங்கள் அற்புதங்கள் கிடையாது. அன்று வள்ளுவர் சொன்னதை நாம் இன்று கையாள முடியவில்லையென்றால், அது நூலின் பிழையன்று; நாம் மனிதத் தன்மையிலிருந்து மனிதப் பண்பிலிருந்து நெடுந்துாரம் விலகிச் சென்றிருப்பதே காரணமாகும். கல்விக்கும் வாழ்க்கைக்கும்