பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

360

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கொல்லை குரல்வாங்கி யீனா மலைவாழ்நர்
அல்ல புரிந்தொழுக லான்”

என்பது கருத்துவளம் நிறைந்த கலித்தொகையின் அடிகள். இந்த அடிகளைத் தமிழ் மக்கள் சிந்தனையில் இருத்த வேண்டும். சிந்தையிலிருத்துவதோடன்றி வாழ்க்கையிலும் அமைத்துக்கொள்ள வேண்டும். நல்லனவே எண்ண வேண்டும். அறமே ஆற்றவேண்டும். அச்சத்தாலும் அன்பாலும் நல்லறநெறிக்கு ஆற்றுப்படுத்துகின்ற நெறிநின்று வாழ்ந்து அல்லன செய்யாது நல்லனவே செய்து வாழ்ந்தால் வயலும் விளையும், நிலமும் உயரும்.

15. மழை வளம்

மாநிலத்துயிர்கள் வாழ்க்கையின் இன்ப நலம் நீர் வளத்தைச் சார்ந்திருக்கிறது. நீரின்றி வாழ்க்கையே இல்லை. "நீரின்றமையா உலகம் போல" என்று நற்றிணையே பேசுகிறது. "மழையின்றி மாநிலத்தார்க்கு இல்லை," என்று ஒழுக்க நூல் ஓதுகிறது. அதனாலன்றோ நல்லனவே சொல்லும் திறமுடைய திருவள்ளுவர் கடவுள் வாழ்த்துக்குப் பின் வான்வளத்தை வாழ்த்துகிறார்.

இறைவனது பேரருளை மக்கள் உணரக் கருவியாக அமைந்து கிடப்பது இயற்கை இயற்கை உடல், இறைமை நிலை உயிர். முதல்வனது கங்கு கரையற்ற கருனைப் பெருக்கே வான்மழை, "இன்னருளே என்னப் பொழியாய் மழையேலோ ரெம்பாவாய்" என்று மாணிக்கவாசகர் பாடுகின்றார்.

வானம் பொய்ப்பின் வளம் குன்றும் வளம் குன்றினால் வாழ்க்கையில் இன்பம் அருகித் துன்பம் பெருகும். மழைவளம் மாறின் வையுதம் திெட்டுவிடும். ‘உல்கு புரப்பதுமாகி என்று புறம் பேசுகின்றது. மதலையின் பசிநோய்