பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

366

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கருத்துவழி வள்ளுன் பெற்றெடுத்த மாபெரும் கவிஞன் கம்பன். அவன் வள்ளுவன் வலியுறுத்திய நாகரிகத்தைப் பின்னணியாகக் கொண்டு பெரிய காவியத்தைப் பாடினான்.

இன்று உலகம் முழுவதுமே சமுதாயத்தின் பொதுச் சிக்கலைப்பற்றிப் பேசும் நிலைக்கு வந்து விட்டது.

இன்றைய உலகின் - சமுதாயத்தின் பொருளியல் கொள்கையில் மூவகைக் கொள்கைகள் நிலவுகின்றன. முதலாவது மனிதன் அவனவன் திறமைக்கு ஏற்றவாறு எவ்வளவு பொருளும் திரட்டலாம்; அனுபவிக்கலாம். அது அவனுடைய பிறப்புரிமை, சட்டமும் அவன் உரிமையைக் காப்பாற்றித் தரும். தனி மனிதனுக்குள்ள முக்கியத்துவத்தை மறக்காதது - இது முதலாளித்துவக் கொள்கை, அமெரிக்காவின் நடைமுறைக் கொள்கை இன்னொன்று மனிதனுடைய திறமைகள் எவ்வாறிருப்பினும் அவனுடைய செல்வத்துக்கும், அனுபவத்திற்கும் கட்டுப்பாடுகள் உண்டாக்கி இயந்திரம்போல் மனிதனை வாழச் செய்வது. தனிமனிதனைப் பற்றியே கவலைப்படாமல் சமுதாயத்தையே முதன்மைபடுத்துவது. இதுவே கம்யூனிசம். இவ்விரண்டிற்கும் இடைப்பட்டதாக தனி மனிதனுடைய திறமைகளுக்கும் வாய்ப்பளித்து - எந்த ஒருவருடைய திறமையும் - மற்றவருடைய திறமையை - வாய்ப்பை அபகரிக்காமல் இருக்கும் படி தடுத்து எல்லோருக்கும் - எல்லா வாய்ப்புக்களும் கிடைக்கும்படி செய்வது, சோஷலிசம். இதுவே நம்முடைய தாயகத்தின் கொள்கை. இத்தகைய சமுதாயத்தைப் பற்றிக் கம்பனும் பேசுகிறான்.

"கள்வார் இலாமைப் பொருள் காவலும் இல்லை; யாரும்
கொள்வார் இலாமைக் கொடுப் பார்களும் இல்லை மாதோ"

என்று குறிப்பிடுகிறான். எவ்வளவு அழகான கருத்து கொள்பவர்கள் யாருமில்லையாதலின் கொடுப்பவர்கள் யாருமில்லையாம். அதுமட்டுமல்ல - அங்கு 'வள்ளல்கள்'