பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

385


கிறார்களா? அவற்றின் தவறுகளுக்காக அவற்றை வெட்டி விசி எறிந்துவிடுவதில்லையே.

ஆனால் அண்டை அயலான் தனக்கு ஏதேனும் சிறு தீங்கு செய்துவிட்டாலும் கத்தியும் கையுமாகப் புறப்பட்டு விடுகின்றனர். இத்தகைய மனிதர்கள் உளவலிமையற்றவர்கள். இவர்கள்தான் கத்தியும் கம்பும் தேடுவர். உள்ள வலிமையுள்ளவர்கள் தீங்கினையும் பொறுத்திருக்கும் ஆற்றல் பெற்றிருப்பார்கள்.

படைபலத்துக்காக நாம் படையைப் பெருக்குவது உண்மைதான் ! எனினும் நமது படைப் பெருக்கம் தற்காப்புக்காகவேயன்றி மற்றவனை அடிப்பதற்கு அன்று.

தவிர்க்க முடியாத சூழ்நிலையில் நாம் நம் நாட்டைக் காப்பதற்காகப் போர் தொடுக்கிறோமே தவிர, அடுத்தவனைவென்றால் பேரரசாகலாம் என்ற போர் வெறி காரணமாக வீம்புக்காக நம் படையைப் பெருக்கவில்லை. வலியச் சென்று பிறர் பொருளைத் தீண்டக்கூடாது - தீண்டுவது தவறு என்ற கொள்கையை உடையது நம் அரசு.

அகிம்சை என்பது பிற உயிர்களைக் கொல்லாமல் இருப்பது மட்டுமன்று. அது மிகமிக நுண்ணியது ஆழ்ந்த பொருளுடையது. ஒருவன் அகிம்சை நெறியாளன் என்றால் அவன் தன் எண்ணத்தாலும் பேச்சாலும் செயலாலும் பிறர்க்குத் துன்பம் வருவனவற்றை நினைக்காமல் - பேசாமல் - செய்யாமல் வாழவேண்டும். அதுதான் அகிம்சை, தீயன நினையாதே - தீயன பேசாதே - தீயன செய்யாதே என்பதுதான் அகிம்சை.

மனிதன் அண்டை வீட்டுடன் பக்கத்து நாட்டுடன் ஒட்டி வாழும்போது சிற்சில துன்பங்களைப் பெறுகிறான். அவற்றை எல்லாம் பொறுத்துக் கொள்ளத்தக்க உள்ளம் வேண்டும்; உள்ள வலிமை உடையவனே அகிம்சையை நிலைநாட்டுவான். உள்ளவலிமையற்றவன் எதற்கெடுத்தாலும்