பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

390

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சின்னமாக நினைத்து நாம் கதர் அணிய வேண்டும். வாயில்லாதவனுக்குக் கூட வீடு தேடிக் கொண்டுபோய் சோறு கொடுப்பது நமது கடமை - அதிலே ஒவ்வொரு குடிமகனுக்கும், குடிமகளுக்கும் பொறுப்பு இருக்கிறது.

எல்லோருக்கும் வாழ்வு தருவதுதான் இன்று நமக்கிருக்கும் முதல் வேலை. இங்கு ஆளும் தகுதியுடையவர்களாக ஒரு பிரிவினரையும் ஆளப்படும் தகுதியுடையவர்களாக இன்னொரு பிரிவினரையும் பழக்க வேண்டும்.

குடியரசு நாட்டில் ஆளுவது மட்டுமே பொறுப்புடையது அல்ல - நல்ல குடிமக்களாக - குடியாட்சித் தத்துவத்தில் திளைத்தவர்களாக வாழ்வதும் பொறுப்புடையதுதான். அந்தப் பொறுப்பு வளரும்போது, ஊழியம் பெரிதேயன்றி, ஊதியம் பெரிதல்ல என்ற உயர்நிலை உருவாகிவிடும்.

21.நாமும் பூமிதான இயக்கமும்

முன்னுரை

இந்தியநாடு இன்பத்திருநாடு. கங்கை முதல் காவிரி முதலிய புண்ணிய நதிகளின் புனல்கொடையால் பல்வளம் கெழுமியநாடு, அன்பே நினைந்து அறமே புரிந்து அருள் ஒழுக்கம் மேற்கொள்வோர் வாழும் பெருநாடு. இந்திய நாட்டின் வரலாற்றில் அன்பின் நிகழ்ச்சிகளே மிகுதி. தானத்திலும் உயர் ஞானத்திலும் சிறந்தது இந்தியநாடு. அணுகுண்டு சகாப்தத்தில் அஹிம்சையின் மூலமாக விடுதலை பெற்றதே இந்தியநாட்டின் பண்பாட்டிற்குத் தக்கசான்று. சமுதாயத்தின் நலனுக்குப் பொருளியல் சமத்துவம் மிக மிகத் தேவையானது. சமத்துவம் இல்லையானாலும், தனி மனிதனுடைய அத்தியாவசியமான சுய தேவையாவது நிறைவு செய்யப் பெறுதல் வேண்டும். அங்ஙனம் சுயதேவை நிறைவு