பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

402

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நேர்ந்த காலத்தில் 'ஒருவன் ஒருத்தி' என்ற சித்தாந்தத்தை உணர்ந்த அம்மையப்பனைப் பாடிப் பரவினார் அப்பரடிகள்.

அப்பரடிகள் காலத்தில் கடவுள் நம்பிக்கை அருகியிருந்தமையால் அவர் முழுக்க முழுக்கச் சமயத்தையும். கடவுள் நம்பிக்கையையும் வளர்க்க வேண்டியதாயிற்று. எனவே அவர் கடவுள் நம்பிக்கையை அதிகம் வலியுறுத்தினார்.

முழுமையுடைய வாழ்வே சமய வாழ்வு. சமயச் சூழலில் முழுமையுடைய வாழ்க்கையை உருவாக்குவதற்கென்றே அமைந்தன. தொல்காப்பியர் காலத்துச் சமயத்தை விட அப்பரடிகள் காலத்துச் சமயம் உயர்ந்தது. நமது சமயம் காலத்தில் மூத்தது, கருத்தாலும் மூத்தது. உடலை வலுப்படுத்துவதற்கு உடற்பயிற்சியும் அறிவைப் பெருக்கிக் கொள்வதற்கு அறிவுப் பயிற்சியும் உள்ளன. அதுபோல உணர்வை சிந்தனை வழிப்படுத்துவதற்குரியது சமயப் பயிற்சி. இலக்கியமும், இலக்கியங்கண்ட சமயமும் நமது வாழ்க்கையில் அமையுமானால் வாழ்க்கையில் சிக்கலே இருக்காது. வாழ்க்கையில் அத்தகு இலக்கியம் மலர்ந்தால் சமுதாயத்தை வாழ்விக்கும் சமய மனம் வீசும்.

23. தனிமனிதனும் சமுதாயமும்

தனிமனிதனுக்கு உரிமை உண்டா இல்லையா? தனி மனிதனுக்கு உரிமையில்லாத நாட்டில் சுதந்திரம் எப்படியிருக்க முடியும்? சமுதாய உரிமை என்று பேசும் போதுகூட தனி மனித உரிமை ஒத்துக்கொள்ளப்பட்ட ஒன்றுதான். மழை மலையிலே பெய்து வாய்க்கால் வழியாக ஓடிக் கழனிகளுக்கு வந்து, மீண்டும் தனித்தனியாகப் பயிர்களுக்குத்தானே போகிறது. அது போல சமுதாய உரிமை - சோஷலிச உரிமை - பொது உரிமை என்று சொல்லுகிற