பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

417


அலுவலக வேலைகள் அனைத்திற்கும் பிரதேச மொழிகளைப் பயன்படுத்துவதற்கும் கல்வித் துறையில் பிரதேச மொழிகளைப் பயிற்று மொழிகளாக்குவதற்கும் எல்லா மாநில அரசுகளும் மத்திய அரசின் உதவியோடு தீவிர நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த வேலை நிறைவெய்த வேண்டும்.

அறிவியலில் அன்றைய நாள்வரை அடைந்துள்ள விஞ்ஞான அறிவையும் பொருளியல் மேம்பாட்டையும் தொழில் வளர்ச்சியையும் ஒவ்வொரு பிரதேச மொழியிலும் களஞ்சியமாக்க வேண்டும்.

மத்திய அரசாங்க வேலைக்காகத் தேர்வு எழுதும் பல்வேறுபட்ட பிரதேச மொழி மக்களை, இந்தி மொழியில் நல்ல தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற கேடு பயக்கும் துரபிமான எண்ணம் இல்லாமல் அவர்கள் தாய்மொழியிலேயே தேர்வு எழுத மத்திய அரசு அனுமதிக்கலாம்.

இந்திய ஒருமைப்பாட்டை நிலைநிறுத்த ஒரு மொழி இன்றியமையாதது என்பதில் துளியும் சந்தேகம் இருக்க வேண்டாம். அந்த ஒரு மொழியும் மத்திய ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்பதிலும், அதுதான் இந்திமொழி என்பதிலும் சிறிதும் ஐயத்திற்கு இடமளிக்க வேண்டாம்.

ஆனால், அதே நேரத்தில், அந்தந்த மாநிலங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் தங்கள் தங்கள் பிரதேச மொழியிலே அலுவலக நிர்வாகத்தை மேற்கொள்ள மத்திய அரசாங்கம் கவனித்துக்கொள்ள வேண்டும். பல்வேறு மொழிகளைப் பேசும் மக்களுக்கு இவ்வேற்பாடு மனநிறைவளிக்கக் கூடியதாகும். நல்ல தேச ஒற்றுமையை உண்டாக்கவும்கூட இது உதவியாக அமையும்.

மாநிலப் பிரதேசங்களில் ஒற்றுமையைக் குலைக்கும் சக்தி அப்படி ஒன்றும் பிரமாதமாக இல்லை. பிரிவினைக்காக வாதாடியவர்கள் கூட பிரிவினைக் கொள்கையை இப்போது