பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

418

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கைவிட்டுவிட்டார்கள். இந்த நேரத்தில், அரசாங்க வேலைகளுக்கு ஆள் அமர்த்துதல், உதவியளித்தல், நிவாரண மளித்தல், ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழான அபிவிருத்தி வேலைகள் அனைத்திலும் தப்பான அபிப்பிராயத்திற்கு இடமளிக்காத - எந்த வகையிலும் வேற்றுமை காட்டாத ஒரே விதமான கொள்கையை அரசாங்கம் மேற்கொண்டால் இனவழிப்பகுதி இடத்தைக் காட்டி தேச ஒற்றுமையை எதிர்க்கும் சக்தியைத் தகர்க்க முடியும்.

பொருளாதார ஏற்றத்தாழ்வும் தேசிய ஒற்றுமையைக் குலைக்கும் பெரிய காரணமாக அமையும் என நாங்கள் கருதுகிறோம். நமது இறுதிக் குறிக்கோளான ஜனநாயக சோஷலிச சமுதாயத்தைக் காண உடனடியாக நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.

தற்போது இருப்பதைப்போல எந்தவித சாதி வேறுபாடும் இல்லாது ஒருவருக்குக் கொடுக்கப்படுவதுபோல் அனைவருக்கும் வாய்ப்புக்கள் கொடுக்கப்பட்டால்தான் நல்ல தேச ஒற்றுமையை உண்டாக்க முடியும். ஆகவே எல்லா வகையிலும் பொருளாதார ஏற்றத்தாழ்வை நீக்க கூட்டுறவு முறையை எல்லா வழிகளிலும் மேற்கொள்ள வேண்டும்.

வகுப்பு வாதமும் சாதீயமும் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கின்றன என்பதில் திடமான நம்பிக்கை கொண்டிருக்கிறோம். தேர்தல் காலத்தில் அரசியல் லாப வேட்டைக்காக அரசியல் கட்சிகள் சாதீய உணர்வைத் தூண்டிவிடுகின்றன. இச்செயல் இரங்குதற்குரியது மட்டுமல்ல; வருந்துதற்குரியதுமாகும். இதுபோன்ற காரியங்களைத் தடுக்கவும் ஆக்கம் கொடுப்பதைத் தளர்த்தவும் நமது எல்லாச் சக்திகளையும் பயன்படுத்தியாக வேண்டும்.

சாதீய உணர்ச்சியையும் வகுப்புவாத உணர்ச்சியையும் எழாமல் செய்யக் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற் கொள்ளலாம்.