பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

421


புரிவதும் எழுதுவதும் சட்டப்படி குற்றமாகும் என்று பிரகடனப்படுத்த வேண்டும்.

குறிக்கோளுடைய வாழ்க்கையை நோக்கும் எதிர்கால சமுதாயத்தைக் கல்வி. ஒன்றால்தான் முன்னேற்றுவிக்க முடியுமாதலால் தேசிய ஒருமைப்பாட்டை உருவாக்குவதிலும் கல்வி முதன்மை இடத்தைப் பெறுதல் வேண்டும்.

ஒருமைப்பாட்டை உருவாக்குவதில் சில காலம் கல்வி கூட தோல்வியடைந்தது. காரணம், நடைமுறையில் அது மிகவும் தாழ்ந்து இருந்ததேயாகும். தற்போது இருப்பதைவிட இந்தியக் கல்வித் திட்டத்தில் இந்திய ஒருமைப்பாட்டை உருவாக்கும் வகையில் செயல் முறையில் அதிக அளவு மாற்றம் ஏற்படுத்தலாம்.

அதற்குரிய ஆலோசனைகள்.

ஒவ்வொரு கல்வி நிறுவனமும் குறித்த காலத்தில் கொடியேற்று விழா நடத்தல் - தேசிய கீதம் இசைத்தல் தேசிய உறுதி மொழிச் சத்தியம் எடுத்துக்கொள்ளுதல் ஆகிய முறைகளை நடைமுறையில் கொள்ள வேண்டும். தேசிய உறுதி மொழி கீழ்க்கண்ட விதத்தில் எடுத்துக் கொள்ளலாம்:-

மொழியால் நாம் தமிழர்கள் - தேசத்தால் நாம் இந்தியர்கள். நாமெல்லாம் இந்தியக் குடிமக்கள் என்று இதயபூர்வமாக உறுதி மொழி எடுத்துக் கொள்கிறோம். எந்த நிலையிலேயும் மொழியாலோ மதத்தாலோ அல்லது சாதியாலோ எந்தவிதமான வேற்றுமையும் எழுதற்கு நாங்கள் இடமளிக்க மாட்டோம். பாரதத் தாய்க்கும் பாரத மக்களுக்கும் பணி செய்து வாழ ஆயத்தம் எடுத்துக் கொள்வோமாக!

(மாநிலப் பகுதிக்குத் தக்கவாறு உறுதி மொழியின் முதற் சொற்றடரை மாற்றிக் கொள்ளலாம்.)

ஒருமைப்பாட்டைக் குலைத்துப் பிரிவினை, உணர்ச்சியைத் தூண்டக்கூடிய இலக்கிய வரலாற்றுப்