பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

427


விலைவாசி ஏற்றம் பற்றிப் பேசப்படுகிறது. இம்மாதிரி நேரங்களில் விலையேற்றம் வரவேற்கத்தக்கது தான். எனினும் விலைவாசி ஏற்றம் உற்பத்தி செய்கிறவனுக்குக் கிடைக்க வேண்டும்.

"வரி உயர்வினால் விலைவாசி உயர்ந்திருக்கிறது; இதற்கு வணிகர்கள் பொறுப்பில்லை" என்று வணிகர்கள் கூறுகிறார்கள். இன்று, 60 சதவிகித மக்களுக்கு, விலைவாசி உயர்வுக்கு ஏற்பச் சாமான்கள் வாங்கி வாழ்க்கை நடத்த வருமானம் இல்லை. தனிமனித வாழ்க்கையில் சோஷலிசப் பண்பு இல்லையானால் சமுதாயதத்தில் சோஷலிச ஒழுக்கம் நிலைக்காது. அடிமைக் காலத்தில் நாம் பலவாறாகப் பிரிக்கப்பட்டோம். இன்று சுதந்திர நாட்டில் - சுதந்திர மக்களாக வாழ்கிறோம். நம்மிடையே, நாமெல்லாம் "ஒரே குடும்பம்"என்ற பாச உணர்வு வளரவேண்டும். வளர்ந்துவரும் புதிய சமுதாயத்திற்கு இந்தக் குடும்ப உணர்வு இன்றியமையாதது. வணிகர்களும் இந்த “ஒரு குடும்ப" உணர்வோடு சராசரி மக்களின் வாங்கும் சக்தியை வளர்க்கப் பாடுபட வேண்டும்.

வணிகத் துறையில் ஈடுபட்டிருப்பவர்கள் தினமும் சிட்டைப் புத்தகத்தைப் பார்த்துக் கணக்கு முடிப்பது போல ஒவ்வொரு நாளிலும், நாம் ஒழுக்கம், பண்பு ஆகியவற்றால் வளர்ந்திருக்கிறோமா என்று அன்றாடச் செயல்களைக் கொண்டு ஆராய்ந்து பார்த்து முடிவு செய்யவேண்டும்.

ஆன்மீகமும் வாணிகமும் தாமரையும் தண்ணீரும் போல. நமது வாழ்க்கை, பொருள், முயற்சி, ஒழுக்கம் அனைத்திலும் ஆன்மீக வாழ்க்கை கலந்திருக்க வேண்டும்.

சாப்பிடுகிற மனிதனுக்குப் பசி நீங்கவேண்டும்; குளிக்கிற மனிதனுக்கு அழுக்கு நீங்கி, உடல் வெப்பம் தணிய வேண்டும். வழிபாடு செய்கிற மனிதனுக்கு உள்ளத்தில் உள்ள வெப்பக்காடு குறைய வேண்டும். இதற்குத் தாய்மொழியில் வழிபாடு செய்வது இன்றியமையாதது. உள்ளத்தின்