பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

428

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அழுக்கைப் போக்கி, வெப்பத்தைத் தணித்துத் தூய்மைப் படுத்தும் கோயில்களை வணிகத் துறையாக்கிவிட்டால் நாம் எங்கே போய் நமது உள்ளத்தைத் துாய்மையாக்கிக் கொள்ள முடியும்? எங்கே போய், வெப்பத்தைத் தணித்துக் கொள்ள முடியும்? ஒரு மனிதனின் அன்பும், கருணையும் உலக மக்களை அணைக்கும்போதுதான் அவன் ஆத்மார்த்தீக மனிதனாகிறான்.

வணிகத்துறையில் ஈடுபட்டிருப்பவர்கள் மக்கட்குத் தேவையான பொருள்களை வாங்கிக் கொடுப்பது போல - அவர்களின் வாழ்க்கைக்குத் தேவையான அன்பையும் பண்பையும் கற்றுக் கொடுக்க முடியுமா? அரிசி விற்கும் கை அருளியலையும் விற்க முடியும் என்பதை வணிகப் பெருமக்கள் உண்ர்ந்து தொண்டுபுரிய முன்வரவேண்டும்.

27. சமாதானம் வாழ்க்கையின் ஒரு பகுதி

"சமாதானம் செய்து வைப்பவர்கள் பாக்கியவான்கள்" - என்பது ஏசுவின் இனிய செய்தி. வாழ்க்கையின் பேறுகளை உண்மை, அறிவு, ஆனந்தம் என்று முறைப்படுத்துவார்கள் அருளாளர்கள். இன்றைய மானுடம் ஆனந்தம் - மகிழ்ச்சி, இன்பம், உடலுக்குரிய சுகம், களிப்புக்களை நிறைய பெற்று வளர்ந்துள்ளது. ஆயினும் ஆன்மாவில் அமைதி இல்லை; ஆனந்தம் இல்லை; ஏன்? நாம் முற்றிலும் ஆவேசமானதும் விரைவுணர்வு பொருந்தியதும் அற்புதமானதுமாகிய சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நமது வாழ்க்கையில் ஏராளமான அடிப்படைப் பிரச்சினைகள் உள்ளன. இந்தப் பிரச்சினைகளைப் பற்றிய நமது கருத்து, இன்றுள்ள கருத்துடன் முற்றிலும் மாறுபட்டது. அதுமட்டுமல்ல, அன்றைய கருத்து அறியாமையின் காரணமாக அப்படி இருந்தது என்று இன்று