பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/457

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

445


"குன்றக்குடி மாதிரி"(Kundrakudipattern) திட்டமிட்டுச் செய்ய முன்வரும் தொண்டு நிறுவனங்களுக்குத் தமிழ்நாடு அறக்கட்டளை உதவலாம். குன்றக்குடியிலும் ஒரு மருத்துவமனை, திருமண மண்டபம் கட்டவேண்டும். கிராமத்திட்டக் குழுவிற்குக் கூட்டச்செலவு, நிர்வாகச்செலவு ஆண்டுதோறும் ஒரு லட்சரூபாய் வருகிறது. இந்தச் செலவைத் தற்போது குன்றக்குடி ஆதீனம் ஏற்றுள்ளது. குன்றக்குடியில் திருமண மண்டபம் தமிழ்நாடு அறக்கட்டளை கட்டித்தந்து அதன் வருவாயிலிருந்து தொடர்ந்து திட்டமிடலும் வளர்ச்சிப்பணிகளும் நிகழும். குன்றக்குடியில் மட்டுமல்லாமல் மற்ற இடங்களிலும் இந்தப்பணியைச் செய்ய உதவியாக இருக்கும்.

தமிழ்நாடு அறக்கட்டளை நிறுவனத்தாரின் நல்லெண்ணத்திற்குப் பாராட்டு! தமிழ்நாட்டின் வளர்ச்சியை உணர்ச்சி வசப்பட்ட நிலையில் அணுக மாட்டீர்கள் என்று நம்புகின்றோம். அதோடு நெடிய பயன் தராத திட்டமில்லாத தர்மங்களையும் இலவசங்களையும் விரும்பமாட்டீர்கள் என்று நம்புகின்றோம். இந்தியாவிலேயே ஐந்தாவது திட்டத்திற்குப்பிறகு திட்டமிடுதலிலேயே தாமதம். திட்டச் சார்பில்லாத செலவினங்களே நம்முடைய அரசில் அதிகம். கிட்டத் தட்ட அரசையும் தேர்தல் சாதனமாக மாற்றிக் கொண்டு வருகின்றனர். இத்தகைய தவறுகளைத் தமிழ்நாடு அறக்கட்டளையினர் செய்யவேண்டிய நெருக்கடி இல்லை என்றே நம்புகின்றோம். தமிழ்நாட்டின் நிலையான வளர்ச்சிக்கு நெடுந்தொலைவு நோக்குடன் திட்டமிடுங்கள்! இத்துறையில் தமிழ்நாட்டில் ஓர் ஆலோசனைக் குழுவை அமையுங்கள்! இந்த ஆலோசனை குழுவில் தமிழ்நாட்டின் தலைசிறந்த பொருளாதார நிபுணர்களை, அறிவியல் மேதைகளை இடம்பெறும்படி செய்யுங்கள்! இந்திய தேசிய விஞ்ஞான மையங்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். காரைக்குடியில் அமைந்துள்ள மத்திய மின் வேதியியல் ஆய்வக இயக்குநரும் மற்ற விஞ்ஞானிகளும்