பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/463

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

451


மாளிகை, நல்வாழ்க்கைக்கு ஏற்றது. உலகந்தழுவிய ஒட்பம் பெற, மொழிகள் என்ற சாளரங்களைத் திறந்து விடுங்கள்! பல மொழிகளைக் கற்பது நல்லது. குறைந்தது நான்கு மொழிகளை கற்றவர்கள் பலவான்களாக விளங்குவர். மொழிச் சாளரங்களைச் சாத்திவிடாதீர்கள். ஒரு மொழியின் ஆதிக்கத்தை எதிர்ப்பதையும் அம்மொழியைக் கற்பதையும் ஒன்றாகக் கருதக்கூடாது. நமது தலைவர்கள் ஆங்கிலேயர் களுடைய ஆதிபத்தியத்தை எதிர்த்தார்கள்; ஆனால் ஆங்கிலத்தைத் துறைபோகக் கற்றிருந்தனர், ஆங்கிலேயர்கள் மெச்சும் அளவுக்கு ஆங்கிலம் பேசினார்கள். இது இன்றைய இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக அமையும் என்று நம்புகிறோம்.

பல மொழிகளைக் கற்க வேண்டும் என்று சொல்வதால் தாய் மொழியின் நிலை என்ன?

"வேறு வேறு பாஷைகள் கற்பாய் நீ
வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ"

என்று பாரதி கூறியதை நினைவு கூர்க.

தாய்மொழிக் கல்வி மரத்திற்கு மண்போல இன்றி யமையாதது. மாணவர்கள் தமிழ் வழியாகக் கற்கும் வாய்ப்பை இன்னமும் பெறவில்லை. அறிவியல் துறைகள் பலவற்றையும் தாய்மொழியின் வாயிலாகக் கற்க வேண்டும். கல்விக்குச் சிந்தனை அவசியம். இன்று பொதுவாகக் கல்வித் துறையில் சிந்தனைத் திறனும் படைப்புத் திறனும் குறைந்து வருகின்றன. அதற்குக் காரணம் தாய்மொழிவழிக் கல்வி இல்லாமல் போனதேயாம். அதனால் தமிழரிடத்தில் அறிவியல் சார்ந்த வளர்ச்சி போதுமானதாக அல்லது வளர்ந்துவரும் காலத்தின் தேவையை ஈடு செய்யக்கூடியதாக இல்லை. தமிழர் வாழ்வு சிறக்க, தமிழ் வளர தாய்மொழி வழி அனைத்துத் துறைகளும் கற்பிக்கப் பெறுதல் வேண்டும். ஆய்வு நோக்கில் ஆங்கில மொழியை ஒரு மொழியாகப்