பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/465

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

453


ஏழ்மை ஆகியவற்றை எதிர்த்துப் போராடுக! ஒருமைப்பாடு காண்பீராக! புதிய பாரதம் உருவாகட்டும்!

இந்தியா தனக்கெனப் பண்பாடும் நாகரிகமும் பெற்று விளங்கும் புகழ் பூத்த நாடு.

"ஒன்று பரம்பொருள் நாமதன் மக்கள்
உலகின்பக் கேணி”

"எல்லாரும் அமரநிலை எய்தும் நன் முறையை
இந்தியா உலகிற்கும் அளிக்கும்! - ஆம்!
இந்தியா உலகிற்கு அளிக்கும்."

என்று பாரதி கூறிய வாசகங்களை உணர்க! பாரதியின் வாக்கை வரலாறு ஆக்கும் சாதனையைச் செய்வீர்களாக!

இந்தியா ஒரு நாடு. அரசியல் ரீதியாக இந்தியா ஒரு நாடானது என்பதற்கு வரலாற்றுச் சான்றுகளை ஆட்சி யாளர்கள். வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடலாம். ஆனால், பண்பாடு, கலாச்சார ரீதியில் இந்தியா ஒரு நாடாக வரலாற்றிற்கு எட்டாத காலத்திலேயே விளங்கியது. பழைய இந்தியாவில் பல மொழிகள் பேசப்பெற்றன. பல மதங்களும் அனுஷ்டிக்கப் பெற்றன. ஆயினும் கலாசாரம் ஒன்றாகவே விளங்கியது. இது இந்த உலகத்திலேயே ஒரு புதுமை, "வட பெருங்கல் - தென்குமரி” என்று தமிழ் இலக்கியங்கள் கூறும். யாத்திரை பற்றி "காசி - இராமேசுவரம்" என்று சொல்லப்படும் வழக்கு பலரும் அறிந்ததே. பாவேந்தன் பாரதிதாசன்.

"இமயச் சாரவில் ஒருவன் இருமினால்
குமரியிலிருந்து மருந்து கொண்டு ஓடினான்."

என்று கூறியபடி ஒருமைப்பாட்டினை - உணர்வு பூர்வமான ஒருமைப்பாட்டினை வளர்த்துக் காப்போம்!

ஒன்று சேர்ந்து நம்மைக் காத்துக் கொள்வோம்!
ஒன்று சேர்ந்து உண்போம்!