பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



கல்வியாளர்கள் சிந்திக்கும் உரிமை பெறவேண்டும்

அரசியலாளர், கல்வியை கல்வியாளர்களிடமிருந்து பிரிக்கவே முயற்சி செய்கின்றனர். கல்வியியல் சிந்தனையாளர்கள், துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் யாருக்கும் அரசியலைப் பற்றிய கருத்துக்களைக் கூறவோ, விமர்சனம் செய்யவோ உரிமை இல்லை என்ற நிலை உருவாகி வந்துள்ளது. கல்வியாளர் பலர் சூழ்நிலை காரணமாக இதில் அக்கறை காட்டுவதில்லை. அதனால் இன்று அரசியல், பொருளியல் பற்றித் தக்க விவாதங்கள் நடப்பதில்லை; மாணவர்களுக்குக் கற்பிப்பதில்லை. இது மிகப்பெரிய தவறு. வாழ்க்கையிலிருந்தும் அரசியலிலிருந்தும் கல்வி - கல்வியியலாளர்கள் விலகி நிற்பது ஒரு பொய்ம்மை; தற்கொலையும் கூட என்பதை அறிதல் வேண்டும். கல்வியியலாளர்கள், அறிஞர்கள், கட்சி அரசியலில் ஈடுபடுவதைத் தவிர்க்கலாம். தவிர்க்க வேண்டும். ஆனால், அரசியல், சமூக மாற்றங்கள், - பொருளாதாரக் கொள்கைகள் பற்றி - விவாதிக்கவும் விமர்சனம் செய்யவும் உரிமை வேண்டும். அப்போதுதான் நல்ல அரசியல் கால்கொண்டும்; சமுதாயம் வளரும். பல்கலைக்கழகங்கள் தன்னாட்சியுடையனவாக அமைய வேண்டும். கல்வி உலகில், சமுதாயத்தை அரசியலை நெறிப்படுத்துதலுக்குரிய வாய்ப்புக்கள் பெருகி வளரவேண்டும்.

ஆசிரியர் ஒருதுணையே!

மாணாக்கனின் அகத்தில் உறங்கிக் கிடக்கும் ஆற்றலை, ஒளியை வெளிக் கொணர்தலே கல்வி. கல்விக்கு மாணாக்கனது உளப்பாங்கினை அறிதல் முதல் தேவை. நல்ல கல்விமாணாக்கனிடமிருந்தே தொடங்குகிறது. ஆசிரியர் ஒரு துணையே நூல்கள் கருவிகளாகும். மாணாக்கனை வினாக்கள் கேட்கவும் விடைகளைக் காணவும் பயிற்றுவிக்க வேண்டும். ஒரோ வழி, ஆசிரியர் மாணாக்கர்களிடம் வினாக்களைத் தொடுக்கலாம். ஆனால் எக்காரணத்தை