பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்வியியல் கட்டுரைகள்

51


தமிழ் இலக்கிய மன்றம், ஆங்கில மன்றம், அறிவியல் மன்றம், கணித மன்றம், தோட்டப் பணி மன்றம், விளையாட்டுக்குழு, சமயப்பேரவை, மாணவர் நலக்குழு எல்லாம் அமைத்துப் பணி செய்யும் பொறுப்பை மாணாக்கர்களிடம் வழங்கலாம். மாணாக்கர்கள் சந்தா முறையில் நிதி சேர்க்கவும் வாய்ப்பளிக்கலாம். சாரணர் பயிற்சி, தேசிய மாணவர்படை, செஞ்சிலுவைச் சங்கம் முதலியன பள்ளிகளில் தொடங்க வேண்டும். விடுமுறை நாள்களில் சமூகத் தொண்டு செய்யப் பழக்கலாம்.

மேல்நிலைக் கல்வியில் அறிமுகப்படுத்தப்பெற்றுள்ள தொழிற் படிப்பின் சான்று பெற்ற அளவிலேயே பணி பார்க்கும் உரிமை வழங்குதல் கடமை. கலை, இசை, நாடகம் முதலிய துறைகளில் ஆர்வத்தை உண்டாக்கவேண்டும். தேசிய மாணவர் படை மூலம் நாட்டின் சேவைக்குரிய பயிற்சிகள் தரவேண்டும். மேல்நிலைக் கல்வியில் ஆளுமைப் பயிற்சி வழங்கப்படுதல் அவசியம். மேல்நிலைப் பள்ளி, கல்லூரி இவ்விரண்டு நிலையிலும் சமய வகுப்புக்கள், பிரார்த்தனை போன்றவைகள் சேர்க்கப்படவேண்டும்.

உயர் கல்வியில் கல்லூரி நிலையில் ஆய்வு மனப்பான்மை, புதியன புனைதல் முதலானவை அமைத்துத் தரலாம். அறிவியல் சார்ந்த தொழில்நுட்பக் கல்வியும் கற்றுத் தரவேண்டும். அறிவுழைப்பு, உடலுழைப்பு இவ்விரண்டுக்கும் கல்லூரிப் பருவமே சிறந்தது. கல்லூரிக் கல்வி நிலையில் பொறுப்புள்ள குடிமகனாக, குடிமகளாக வளர்க்க வேண்டும்.

கல்லூரிகள் - பல்கலைக் கழகங்களின் பணி

பல்கலைக் கழகங்களைப் பொறுத்தவரையில் நல்ல ஆய்வு அன்றாடம் நிகழ வேண்டும். கல்லூரி நிலையில் ஆய்வியல் சோதனைக் கூடம் சிறப்பாக அமையவேண்டும். புதிய அறிவியல் உண்மைகளைத் தேட மாணவர்களுக்கு நிறைய வாய்ப்புண்டு. நாட்டில் நிகழ்வுகளைக் கணித்து நாடு