பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


செல்லவேண்டிய திசையில் செலுத்தக் கற்றுத் தரவேண்டும். ஆய்வுகள் சமுதாயத் தொடர்புடையனவாக நடத்தப்பட வேண்டும். பல்கலைக் கழக மாணாக்கர்களை இந்த நாட்டின் அரசியல், பொருளாதார ஆய்வுகளை நடத்தவும் அவ்வழியில் தயக்கம் சிறிதுமின்றி வாழ்க்கையை நடத்தவும் பழக்கவேண்டும்.

பல்கலைக் கழகங்கள் வரலாற்றில் நின்று புகழ் பெறத்தக்க ஆய்வாளர்களையும், சாதனையாளர்களையும் உருவாக்கித் தரவேண்டும். கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் மற்றவர்களைச் சார்ந்து வாழ்கிறவர்களாகவும், மற்றவர்கள் உழைப்பிலே பயன்பெறுகின்றவர்களாகவும் விளங்குகிற தீமையிலிருந்து விடுதலை பெறக்கூடிய மாணாக்கர்களை - தலைவர்களை உருவாக்க வேண்டும் என்பது பாரதிதாசன் பல்கலைக் கழகத் துணைவேந்தர் விருப்பமாகும். இந்த நல்லெண்ணம் நிறைவேறக்கூடிய வகையில் நமது பல்கலைக் கழகங்களின் செயற்பாடு அமையுமாக.

கல்விக்கூடங்கள் - சூழல் - வசதி

கல்வி பயிற்றுவிக்கும் கூடங்கள், ஊருக்கு வெளியில் அமைதியான சூழ்நிலையில் இருக்கவேண்டும். இரைச்சல், தூசி, முதலியவற்றால் பள்ளிச் சூழல் கெடக்கூடாது. பள்ளி, நல்ல இயற்கைச் சூழலில் நடைபெற வேண்டும். பள்ளியைச் சுற்றி வேம்பு, அரசு ஆகிய மரங்கள் நிறைய நடவேண்டும். வகுப்பறைகள் நல்ல வெளிச்சமும் காற்றோட்டமும் உடையனவாக அமையவேண்டும். சுகாதார வசதிகள் செய்யப் பெற்றிருக்கவேண்டும். இன்று நூற்றுக்குப் பத்துப் பள்ளிகளில்கூட இந்த வசதி இல்லை. இனிவரும்காலத்தில் முழுமையான வசதியை உருவாக்க வேண்டும். இதற்குச் சமூகமும் அரசும் நிறைய உதவியும் ஒத்துழைப்பும் நல்க வேண்டும். இன்று நாடு தழுவிய நிலையில் கல்வி இலவச மாதத் தருதல் வேண்டும்; தரமான கல்வி தருதல் வேண்டும்.