பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஒரு பையனையாவது பள்ளியிறுதி வகுப்பு (எஸ். எஸ். எல். ஸி) தேர்ச்சி செய்யவைக்க வேண்டும் என்பதை இலட்சியமாகக் கொண்டு உழைத்து வந்திருக்கிறார். 1982இல் தொடங்கியது அவர் முயற்சி. 1992-ல் இரண்டு மாணாக்கர்களைத் தேர்வு பெற வைத்திருக்கிறது. மாணாக்கர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் ஆசிரியர் அவர் செலவிலேயே மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்வாராம். இத்தகு பெரிய மனம் படைத்த ஆசிரியர்கள் இன்னும் பலர் இருக்கலாம். இத்தகு அருள்நலங் கனிந்த ஆசிரியப் பெருமக்களுக்கு நன்றி! பாராட்டு! வாழ்த்துக்கள்!

ஆசிரியர்கள் நலன்பேண ஓர் ஆலோசனை

நமது நாட்டில் ஆசிரியர் தங்களுடைய நலன்களுக்காகத் தொழிற்சங்கவாதிகளைப் போல் போராடுகிறார்கள். இதனால் கல்வி பாதிக்கிறது. ஆசிரியர்கள் செய்வது தொழில் அல்ல; தொண்டு. இதனை ஆசிரியர்களும் மறவாது நினைவிற் கொள்ளவேண்டும். அரசும் ஆசிரியர்களை, போராட்டங்களில் ஈடுபடாதபடி கவனித்துக் கொள்ள வேண்டும்.

ஆசிரியர்கள் நலன் கருதி வழிகாட்டவும் அறிவுரை கூறவும் மாநில அளவில் ஒரு தன்னாட்சித் தன்மையுடைய குழுவை நியமிக்கலாம். இக்குழுவின் தலைவராக, உயர்நீதி மன்ற தலைமை நீதிபதியை நியமிக்க வேண்டும். இக்குழுவில் ஆசிரியர்களின் பிரதிநிதிகள், அரசின் பிரதிநிதிகள் இருத்தல் வேண்டும். இக்குழு அவ்வப்பொழுது ஆசிரியர்கள் பற்றிய அனைத்துப் பிரச்சனைகளையும் ஆராய்ந்து ஆணையிட வேண்டும். இந்த ஆணை சட்டபூர்வமானது. சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் இந்த ஆணையை நிறைவேற்றக் கடமைப்பட்டவர்கள் என்ற சட்ட வரையறையும் வேண்டும். இங்ஙனம் ஆசிரியர்களுக்கு உத்தரவாதமும் பாதுகாப்பும் தரக்கூடிய சட்ட சம்மதமான ஓர் அமைப்பைக் கண்டு