பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்வியியல் கட்டுரைகள்

81


தமிழ்நாட்டில் ஆங்கிலப் பயிற்சி பெற்றவர்கள், மேட்டுச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், தங்களுடைய சமூகத்தின் நலன்களைக் காத்துக்கொள்ள, சாதாரணப் பொது மக்களிடமிருந்து விலகி, உயர்வு நிலை எய்த விரும்புகிறார்கள். இஃது ஓர் ஆதிக்கத் தீமை, விரும்பத்தக்க குணம் அல்ல. இம்முயற்சிக்கு அரசு துணை போகக்கூடாது.


தமிழ்நாடு அறிவியலில் வளராமைக்குக் காரணம்


இஃது அறிவியல் யுகம். ஆனால் தமிழ்நாடு அறிவியலில் வளரவில்லை. ஏன்? அண்மைக் காலத்தில் உலகின் பல பாகங்களிலும் அந்தந்த நாட்டு மொழிகளில் அறிவியல் வளர்ந்துள்ளது. செர்மன் மொழி, ருஷ்ய மொழி, சப்பானிய மொழி ஆகிய மொழிகள் முதலியன குறிப்பிடத்தக்கவை. இன்று இந்த மொழிகளைப் படிக்கப் பலரும் விரும்புகின்றனர். தமிழும் பயிற்றுமொழியாகி, தமிழில் அறிவியல் வளர்ந்தால் தமிழையும் உலக மாந்தர் விரும்பிப் படிப்பர். செயற்பாட்டின்மையே காரணம். ‘தமிழ் வாழ்க’ என்று கூச்சல் போட்டால் போதுமா? தமிழன் வளர்ந்தால் தமிழ் வளரும் - வாழும். நாட்டில் மொழிப் பாதுகாப்புப் பணியே நடைபெறுகிறது. அதுவும் கூட முழுமையாக அல்ல. தமிழ் பாதுகாப்புப் பணி வேறு தமிழ் வளர்ச்சிப் பணி வேறு. “தமிழ் வளர்ச்சிப் பணி இன்னமும் தொடங்கப் பெறவில்லை” என்பார் விஞ்ஞானி வா.செ. குழந்தைச்சாமி. தமிழ் காலந்தோறும் பகைப்புலம் கண்டு வெற்றி பெற்றுத்தான் வளர்ந்து வந்திருக்கிறது. சமஸ்கிருதம், இந்தி ஆகிய மொழிகளால் தமிழனின் ஆன்மீக வாழ்க்கை தான் பாதித்தது; மூளையை - புத்தியைப் பாதிக்கவில்லை. ஆனால் ஆங்கிலம், தமிழ் வளர்ச்சியைத் தடை செய்து தமிழனின் அறிவு வளர்ச்சியையே கெடுத்துவிட்டது. இந்நிலை ஆற்றொனாத் துயரம் தருகிறது. ஆங்கிலம் வளர்ந்த