பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்வியியல் கட்டுரைகள்

83


காலம் ஒளிமயமாக இருக்காது; இருக்கமுடியாது. ஆங்கிலத்தை எடுத்துவிட்டால் அந்த இடத்திற்கு இந்தி வந்து விடும் என்று சொல்வதில் உண்மை இல்லை. நமது அரசியல் சட்டம் பிரிவு 345 - 348 விதியின்படி மாநிலங்களின் அனைத்து நடவடிக்கைகளும் அந்தந்த மாநில மொழிகளிலேயே - தாய்மொழியிலேயே நடைபெற வேண்டும் என்பதாகும். இது அரசியல் சட்டம். ஆதலால் தமிழ்நாட்டில் இந்தி வர வழியும் இல்லை; வாயிலும் இல்லை. நடுவண் அரசின் இணை ஆட்சி மொழியாக ஆங்கிலம் நீட்டிக்கப்படுமாயின் அதில் பங்கேற்க ஆங்கிலத்தை ஒரு மொழியாகக் கற்றல் போதும். ஆனால் நடுவண் அரசின் அணுகுமுறையில் காலப் போக்கில் ஆங்கிலம் அகற்றப்பட்டுவிடும். இந்த இடத்தில் அந்தந்த மாநில மொழி இடம்பெறும் போலத் தெரிகிறது. உதாரணமாக இந்திய ஆட்சிப் பணித் தேர்வை மாநில மொழிகளில் எழுதல்ாம் என்று அரசு அறிவித்திருக்கிறது. தமிழிலேயே இந்திய ஆட்சிப் பணித் தேர்வு எழுதலாம். அது போலவே நாடாளுமன்றத்தில் தாய்மொழியிலேயே பேசலாம். வினாக்கள் கேட்கலாம் என்ற நடைமுறையையும் கொண்டு வந்துவிட்டார்கள். இதனால் காலப்போக்கில் இந்திய அரசின் செயல்முறைகளில் இந்திய மொழிகளே இடம் பெறும் என்ற நிலை உருவாகியிருக்கிறது. இது வரவேற்கத்தக்க ஒன்று. ஆதலால் இனியும் காலந்தாழ்த்தாது அனைத்து நிலைகளிலும் அனைத்துத் துறைகளிலும் தமிழைப் பயிற்றுமொழியாக்க வேண்டும்.

பயிற்று மொழியாகும் தகுதியுடையது தமிழ்

தமிழ், பயிற்று மொழியாவதற்குரிய தகுதி பெற்ற மொழி என்பதையும் அறிக. மாமன்னன் இராசராசன் கட்டிய தஞ்சைப் பெருவுடையார் திருக்கோயிலும் அப்பெருமன்னன் கடலில் ஒட்டிய கப்பலும், கரிகாலன் கட்டிய கல்லணையும் தமிழரின் அறிவியல் - தொழில்