பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



தமிழ் பயிற்று மொழியாதல் மூலம் அடியிற்கண்டுள்ள நன்மைகள் உண்டு என்று நமது பாரதிதாசன் பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் ச. முத்துக் குமரன் அவர்கள் பட்டியலிடுகிறார்கள்:

  1. இயற்கையாக அறிவு பெறலாம்
  2. விரைவாகக் கற்கலாம்
  3. முழுமையாக அறிவு பெறலாம்
  4. சுயமரியாதையை வளர்க்கலாம்
  5. கற்றது நன்கு மனதில் பதியும்
  6. எளிதாகக் கற்கலாம்
  7. சரியாகப் புரிந்து கொள்ளலாம்
  8. கற்கும் நேரம் முழுதும் பயன்படும்
  9. பள்ளிக்கும் வீட்டிற்கும் தொடர்பு வாய்க்கும்
  10. எல்லாரும் உயர்கல்வி கற்கலாம்

இவற்றுடன்

  1. சிந்தனை வளரும்!
  2. அறிவு விரிவாகும்!
  3. புதியன காண வாயில்கள் தென்படும்
  4. மூலைக்குச் சோர்வு வராது

என்றும் சேர்த்துக் கொள்ளலாம்.

முயன்று வெற்றிபெறுவோம்!

1937-ம் ஆண்டில் கூடிய தேசியக் கல்வி மாநாடு தாய்மொழி மூலமே கற்கவேண்டும் என்று தீர்மானம் இயற்றி வலியுறுத்தியது.

கோத்தாரி கமிஷன் அறிக்கை “இந்திய மொழிகளை அறிவியல், தொழில் நுட்பஞ் சார்ந்த மொழியாக் வளர்த்து நவீன்ப்படுத்த வேண்டும்” என்று கூறியது. இந்தப் பணி