பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

89


6

டுத்திட்டுக் கிராமத்தில் பண்ணை வாழ்க்கை அமைதியாக நகர்ந்துகொண்டு இருந்தது. அதிகாலையில் பண்ணை வேலை. பின் விநாயகர். பூஜை; படித்தல், மாலையில் நண்பர்களுடன்! வாழ்க்கைச் சக்கரம் ஒரு Monopoly விளையாட்டு! 'Monopoly' விளையாட்டு இங்கிலாந்திலிருந்து - வந்த விளையாட்டு! விளையாட்டின் பெயரிலிருந்தே விளங்க வில்லையா?

ஒருசேர ஆக்கிரமித்தல், ஆதிக்கம் செலுத்துதல் மேற்கத்திய நாடுகளில் குறிப்பாக பிரிட்டனின் நோக்கம் என்பது இன்றும் நாம் கண்கூடாகப் பார்க்கின்றோமே! மேற்கத்திய நாடுகளால் இராக், கியூபா போன்ற நாடுகள் அனுபவிக்கும் நெருக்கடி எவ்வளவு கொடுமையானது! இராக் நாட்டின் விமானம் அந்த நாட்டின் தெற்குப்பகுதியில் பறக்கக் கூடாதாம்! என்ன சட்டாம்பிள்ளைத்தனம்? வளரும் நாடுகளுக்கு அணிசேரா நாடுகளுக்கு மேற்கத்திய வல்லரசுகளின் அடாவடித்தனத்தைக் கண்டிக்கும் துணிவு வந்திருப்பது பாராட்டுக்குரியது. இந்த 'Monopoly'-யை 'வாழ்க்கைச் சக்கரம்' என்று, தமிழாக்கம் செய்து விளையாடுவது எங்கள் குழுவின் பொழுதுபோக்கு!

அன்று விளையாட்டில் சிறந்த ஆக்கிரமிப்பாளனாக ஆதிக்கக்காரனாக விளங்கியவன் ரெங்கநாதன்! இன்றோ அவர் ஏற்றுக்கொண்டிருக்கும் கொள்கை சமவாய்ப்புச் சமநிலைச் சமுதாயக் கொள்கைதான்....மாலையில் தோட்டம்; மீண்டும் விநாயகர் கோயிலில் திருவிளக்கேற்றி பஜனை செய்தல். பஜனைக்கு ஊரவர் முறை வைத்துச் சுண்டல் வழங்கினர்.

அதிகாலையில் திருக்கோயில் திருமுன்பு தண்ணீர் தெளித்துக் கோலம் போடுதல், 'நாட் பூசனைக்கு வீசம்படி திருவிளக்கு எண்ணெய்; கால்படி அரிசி இவைதான் திருக்-குxvi7