பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


போக்கில் ஜெயபால் நாயனார் நெருங்கிய தோழரானார். மடத்தில் வேலையில்லாத நேரத்தில் ஜெயபால் நாயனார் வீட்டில்தான் ரெங்கநாதன் இருப்பது. ஜெயபால் நாயனாரின் தாயார் மிகவும் நல்லவர்கள். நல்ல சாப்பாடு போடுபவர்கள். இன்றும் ஜெயபால் நாயனார் தருமபுரம் ஆதீனத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறார்.

ஒரு நாள் காலை எட்டு மணி...அலுவலகத்தில் பணி செய்து கொண்டிருக்கிறான் ரெங்கநாதன். அன்று தபால் அனுப்புகை எழுத்தர் பணியும் பொறுப்பில் இருக்கிறது. ஆதலால், "டெஸ்பாட்ச்' வேலை செய்து கொண்டிருக்கிறான். அன்று மயிலாடுதுறை சப்-கோர்ட்டுக்கு அவசரமாக அனுப்பவேண்டிய தபால் ஒன்றும் இருந்தது! அதனைக் கவருக்குள் வைத்து ஒட்டி முகவரி எழுதிக் கொண்டு அலுவலகச் சேவகரைத் தேடிக் கொண்டிருந்த நேரத்தில், அலுவலகத்தின் முதல் நிலைக் கண்காணிப்பாளர் ரத்தினம் பிள்ளை வந்து சேர்ந்தார். இவர்தான் நிர்வாகத்துக்குத் தலைவர். இவர் வந்ததும் கையில் இருந்த கவரைக் கேட்டு வாங்கினார், முகவரியைப் படித்துச் சரிபார்த்துக் கொண்டார்.

"தபாலில் இணைப்பெல்லாம் சரியாக வைத்திருக்கிறாயா?” என்று கேட்டுக்கொண்டே கவரைப் பிரித்துத் தபாலை எடுத்தார். தபாலுடன் பிளேடு ஒன்றும் உடன் வந்தது. பிள்ளைக்கு வந்ததே கோபம்! “சின்னப்பசங்கள், பொறுப்பில்லை!" என்றெல்லாம் திட்டத் தொடங்கி விட்டார். ரெங்கநாதன் அழாக் குறையாகத் தலைகுனிந்தவாறு நின்று கொண்டிருந்தான்.

நடந்தது என்ன? மடத்தில் சிக்கனக் கவர்தான் உபயோகப்படுத்துவது பழக்கம்: அதாவது மடத்துக்கு வந்த தபால் கவர்களையே சீர்செய்து திரும்பவும் உபயோகப் படுத்துவது, அப்போது டெஸ்பாட்ச் பணியில் இருந்தவர்