பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஆணை வேறு. நம்மைப் பொறுத்தவரையில் "நன்றே செய்வாய். பிழை செய்வாய்! நானோ இதற்கு நாயகமே!” என்ற திருவாசக வரிகளும் "கனக்கும் பொதிக்கும் எருதுக்கும் தன்னிச்சை கண்டதுண்டோ?” என்ற திருஞானசம்பந்தர் அருள்வாக்கும் சிந்தனைக்குப் பயன்பட்டன. உள்ளத்தில் உறுதிப்பாட்டைத் தந்தன. அப்போது உடன் பயின்ற கோ. குஞ்சிதபாதம் என்பவர், இரவு பன்னிரண்டு மணிக்கு வந்து பார்த்துப் பேசுவார். மயிலாடுதுறையிலிருந்து பொருட்கள் வாங்கி வந்து தருவார். இதே போல இப்போது நா. மகாலிங்கம் அவர்களிடம் இருக்கும் கோ. முருகையன் இராங்கியத்தில் தமிழாசிரியராகப் பணி செய்து ஒய்வு பெற்றுள்ள வை.க. தண்டபாணி ஆகியோரும் பிறரறியாமல் உதவி செய்தனர். -

நாட்கள் உருண்டோடின. பல மாதங்களுக்குப் பிறகு, ஒரு நாள் பூஜை மடம் வழிபாடு முடிந்து இரவு எட்டு மணிக்கு மேல் அறையில் வந்து படித்துக்கொண்டிருந்தோம். அப்போது மகாசந்திதானம் அவர்களிடமிருந்து அழைப்பு வந்தது. ஒரே பயம். ஏதாவது தவறு செய்து விட்டோமோ என்ற அச்சம்! ஆயினும், அழைப்பை ஏற்று மகாசந்நிதானம் அவர்களைக் கண்டுகொள்ளச் சென்று நிலத்தில் சென்னியுற வீழ்ந்து வணங்கி நிற்கும் பேறு கிடைத்தது.

மகாசந்நிதானம் அவர்கள் திருமுன் இருந்த மேஜையில் ஒரு தாம்பாளத்தில் லட்டுகள், பழங்கள், ஒரு ரூபாய் வெள்ளி நாணயங்கள் இருந்தன. வணங்கி எழுந்த நிலையில் திருவாளன் திருநீறு வழங்கி அருளினார்கள். .

"கற்றைச் செஞ்சடையான் உளன்; நாம் உளோம்" என்ற அப்பர் அடிகள் வாக்கினைப் போல மகாசந்நிதானம் அவர்கள். அவர்கள் திருமுன்பு எளிய மாணாக்கன். இருவரும் தவிர யாரும் இல்லை. மகாசந்நிதானம் அவர்கள் திருவுள்ளங்கனிந்து மொழிந்த சொற்கள் ஊனைத்