பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இயற்றிய ஆசிரியர் செய்த தவறு இது” என்று மரபு பிறழாமல் கந்தசாமித் தம்பிரான் பேசினார்.

எப்படிப் பேசினால் என்ன? வழக்காடிய இந்த முறை, தருமபுரம் சூழலில் பலருக்குப் பிடிக்கவில்லை. கடுமையான தாக்குதல்கள்! முடிவு, தருமபுர ஆதீன விசேடங்களில் இனி பட்டிமன்றம் வைக்கக்கூடாது என்பதுதான்! ஆனாலும் பட்டிமன்றங்கள் தருமபுரம் சூழலில் நின்றுவிட்டனவா?

கந்தசாமித் தம்பிரான், புலவர் இடை நிலைத் தேர்வு எழுத திருச்சிக்கு வந்து திருச்சி மௌனமடத்தில் தங்கியிருந்தார். அந்தச் சமயத்தில் அறிஞர் அண்ணா திருச்சி டவுன் ஹால் மைதானத்தில் பேசுவதாக விளம்பரம். கந்தசாமித் தம்பிரானுக்கு அறிஞர் அண்ணாவின் பேச்சைக் கேட்க ஆர்வம். காவி உடை! தருமபுர ஆதீனத்துத் தம்பிரான்! கூட்டம் நடப்பதோ டவுன்ஹால் மைதானத்தில்! அறச் சங்கடங்கள் நிறைந்த சூழ்நிலை! முரண்பட்ட இருவேறு நிலைகளுக்குள் கிடந்துழலும் ஆர்வம்! அறிஞர் அண்ணாவின் பேச்சைக் கேட்கும் ஆர்வம், முறைகளைப் பின்தள்ளிவிட்டு வெற்றி பெற்றது. வெளுத்துப்போன காவி ஆடையை உடுத்துக் கொண்டார்... இராங்கியத்தில் தமிழாசிரியர் பணி செய்து இப்போது ஓய்வு பெற்றுள்ள வை.சு. தண்டபாணி துணை! டவுன்ஹால் மைதானத்துக்குப் புறப்பட்டுவிட்டார்.

டவுன்ஹால் மைதானத்தில் ஒரு கோடியில்-மக்கள் கூட்டம் குறைவான பகுதியில் நின்று அறிஞர் அண்ணாவின் பேச்சைக் கேட்டார். அண்ணாவின் உருவம் அவ்வளவாகத் தெரியவில்லை, கையை உயரத் தூக்கி அறைகூவல்களைக் கூறும்போது கை தெரிந்தது. பேச்சு நன்றாகக் கேட்டது. அன்று அண்ணா, திராவிட நாடு கேட்டுக் கொண்டிருந்த காலம். ஆதலால் திராவிட நாட்டைத் தமிழர் பெறுவர் ..--ஆள்வர் என்பது பேச்சு, சான்றுக்குச் சேரன் செங்குட்டு-