பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

111


வனின் வடபுலத்து வெற்றியை எடுத்துக் காட்டினார். நல்ல தமிழில், எதுகை மோனை பொருந்தியதாக, கேட்பவர் ஆவேசம் கொள்ளத்தக்க நிலையில் பேச்சு அமைந்திருந்தது. அன்றைய அவருடைய பேச்சில் கந்தசாமித் தம்பிரானைக் கவர்ந்த பகுதி:

"வடபுலத்து மன்னர் தோளும் தலையும் நெரியக் கல் கொணர்ந்த சேரன் செங்குட்டுவன் என் பாட்டன் ஆதலால், இன்று தமிழகத்தை மீட்டது எளிமையானதே!" என்பது. இது கந்தசாமித் தம்பிரானுக்குப் பிடிக்காத கொள்கை ஆம்! இந்தியா ஒரு நாடு-இதில் கந்தசாமித் தம்பிரானுக்கு மாற்றுக் கருத்தில்லை! ஆயினும் அறிஞர் அண்ணா சொன்ன முறை பிடித்துவிட்டது. இதில் என்ன ஒரு வியப்பு என்றால், அந்தப் பயணத்திலேயே ஒரு இந்துப் புராணச் சொற்பொழிவையும் கேட்க கந்தசாமித் தம்பிரான் சென்றிருந்தார். 30 நிமிடங் களுக்குமேல் அந்தப் பேச்சை அவர் உட்கார்ந்து கேட்க இயலவில்லை! ஏன்? தனி மனித விளம்பர வாடை! புராணங்கள் தத்துவச் செறிவுடையன அவற்றை நடைமுறைகளுடன் இணைத்துக் கொச்சைப்படுத்திப் பேசியது கந்தசாமித் தம்பிரானுக்குப் பிடிக்கவில்லை. சொற்பொழிவில் அருமை இருக்க வேண்டும். வாழ்க்கைப் போக்கு இருக்க வேண்டும். சிரிக்கப் பேசுவதாக இருந்தாலும் கலைவாணரைப் போலச் சிரிக்க, சிந்திக்க வைக்க வேண்டும்.

இங்ங்னம் உணர்வுபூர்வமாக வளர்ந்த அறிஞர் அண்ணாவின் நட்பு, திருக்குறள் கூறியது போல நிறைநீர நீரவர் கேண்மையாக உணர்வு நிலையில் வளர்ந்து வந்தது.

கந்தசாமித் தம்பிரான் பூரீலயூரீ தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் என்ற பெயரில் குன்றக்குடி மடாதிபதியாக இருக்கிறார். குன்றக்குடி ஆதீனகர்த்தர், அருள்நெறித் திருக்கூட்டம் கண்டு சமயப் பிரச்சாரம் செய்து வருகிறார். அன்று அவருடன் அருள் நெறித் திருக்கூட்டத்தில் பங்கேற்றவர்களில் காரைக்குடி